பதிவுகள்

அயோத்தியில் அயோக்கியத்தனம் நடந்திருக்கிறது

1992 டிசம்பர் துக்ளக் இதழில்.. சோ அயோத்தியில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும், அவர்களால் குவிக்கப்பட்ட வெறியர்களுமாகச் சேர்ந்து, மசூதியை இடித்துத் தள்ளிவிட்டார்கள். ஆலயத் திருப்பணி என்ற பெயரில், அசல் காட்டுமிராண்டித்தனத்தை நடத்தியிருக்கின்றார்கள். ‘மசூதிக்கு எவ்விதச் சேதமும் வராமல் பார்த்துக் கொள்ளப்படும்’ என்று பொது மேடைகளில் பா.ஜ.கவினர் பேசிய பேச்சு காற்றோடு போயிற்று. இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு, எழுத்து மூலமாக உத்திரப்பிரதேச பா.ஜ.க அரசு …

மேலும் .....

இஸ்லாமோபியாவுக்கு எதிரான ‘மாநாடு’

இஸ்லாமோபியாவுக்கு எதிரான ‘மாநாடு’ சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு, சிம்பு கூட்டணியில் வெளியான ‘மாநாடு’, சமகலாத்தில் முஸ்லிம் சமூகம் சந்திக்கும் வெறுப்பரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் பின்னணியையும் அதன் விளைவுகளையும் இயல்பாக பதிவு செய்துள்ளது. ஆனால், தீவிரமாகவும் முழுமையான உட்கூறுகளுடனும் எடுக்கப்பட்டதா என்றால் இல்லை. அதற்கான அவசியமும் ‘மாநாடு’ படக்குழுவினருக்கு கிடையாது என்பது எனது கருத்து. வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட படக்குழுவினர் …

மேலும் .....

சாதம் என்பதற்கு பதிலாக சோறு என்பதையே பயன்படுத்துவோம்

சோறு – சாதம் இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது.நாம் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். கல்யாண விருந்தில் சத்தமாக “சோறு கொண்டு வாங்க” என்று நாம் கூப்பிடுகிறோமா?கூப்பிடுவதில்லை.காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை ஒரு தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள். நகைச்சுவைத் துணுக்குகளில், திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் பிச்சைக்காரர் கதாபாத்திரம் “அம்மா, தாயே சோறு போடு தாயீ” என்று கூறுவதாக வரும்.எந்த …

மேலும் .....

ஹெர்னியா’ என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தண்ணீரை இப்படி குடிங்க!

ஹெர்னியா’ என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தண்ணீரை இப்படி குடிங்க! தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும் நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். …

மேலும் .....

துப்பறிதல், உளவு பார்த்தல் இஸ்லாம் சொல்வதென்ன?

துப்பறிதல், உளவு பார்த்தல் இஸ்லாம் சொல்வதென்ன? பெகாஸஸ் விவகாரம் இன்று உலகத்தையே அச்சுறுத்துகின்ற மிகப் பெரும் சாபக்கேடாக ஓங்கி நிற்கின்றது. அதனை உருவாக்கிய இஸ்ரேல் அரசு அதனை இராணுவங்கள் பயன்படுத்தத்தக்க ஆயுதமாகத் தான் அறிவித்திருக்கின்றது. அதனை சாமான்யர்கள் எவரும் பயன்படுத்த முடியாது. அது அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்கப்படுகின்றது. ஆனால் இப்போது வெளியாகியிருக்கின்ற இந்த பெகாஸஸ் உளவு மென்பொருளைக் கொண்டு உளவு பார்க்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலோ வேறு கதையைச் சொல்கின்றது. குறிப்பாக …

மேலும் .....

ஊரடங்கில் உதவும் கரங்கள்

ஊரடங்கில் உதவும் கரங்கள் மௌலவி அப்துர் ரஹ்மான் உமரிஇந்த ஊரடங்கில் உலகடங்கில் பலரும் தங்களால் இயன்ற உதவி ஒத்தாசைகளை செய்யக் காணுகிறோம். பிறருக்கு உதவுவது என்பது இறைநம்பிக்கை ஈமானில் அடங்கிய அம்சமாக உள்ளது. பல இடங்களில் இதுபற்றிய குறிப்புகளை வான்மறை தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை நினைவூட்டுகின்றேன், இங்கே.இரவுபகலாக தெரிந்தும் தெரியாமலும் தங்கள் செல்வத்தை செலவளிப்போருக்கு அவர்களது இறைவனிடத்தில் உள்ளது கூலி!. அவர்களுக்கு பயமும் இருக்காது, கவலைப்படவும் மாட்டார்கள், அவர்கள். (அல்குர்ஆன் …

மேலும் .....

பிரமாண்ட சுடுகாடு கட்டி சாதனைப் படைத்த ஒரு அரசாங்கம்!

பிரமாண்ட சுடுகாடு கட்டி சாதனைப் படைத்த ஒரு அரசாங்கம்! ஒருபக்கம் பிராணவாயுக்காக பெருந்திரள் மக்களின் பிராணன் போய்க்கொண்டு இருக்கிறது, இன்னொரு பக்கம் மருத்துவ சிகிச்சைகளுக்காக பிச்சைக்காரர்களைப்போல் மக்கள் யாசகம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பெருந்தொற்று தேசத்தின் நிலையை கைமீறி போகச்செய்திருக்கிறது. • ஜலீல் பார்கர்களும், • கஃபீல்கான்களும், • ஷா நவாஸ் ஷேக்குகளும், • சமரசம் செய்து கொள்ளாத செவிலியர்களும், • முன்கள பணியாளர்களும் உயிரைத் துச்சமாக மதித்து மக்கள் பணியாற்றிக் …

மேலும் .....

கருவிகள் நம்மைக் காப்பாற்றுமா

கருவிகள் நம்மைக் காப்பாற்றுமா எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான விவேக் அவர்கள் சிம்ஸ் மருத்துவ மனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். சமூதாயத்துக்குத் தேவையான நல்ல கருத்துக்களை சினிமா மூலம் சொன்னவர். அதற்காகவே சின்னக் கலைவாணர் என்ற பெயரும் பெற்றவர். திடீர் மாரடைப்பு வந்து உணர்விழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம்.அவருக்கு ஆஞ்சையோ ப்ளாஸ்டி செய்யப்பட்டது என்றும், ECMO கருவி பொருத்தப்பட்டதென்றும் டிவி செய்தியில் கூறினார்கள். இதே …

மேலும் .....

மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை தடை செய்ய அவசர சட்டம்: மத்திய அரசுக்கு கோரிக்கை

மகாராஷ்டிர மாநிலம் மும்பைதெற்கு மண்டல சிவசேனா பிரிவு தலைவரான பாண்டுரங்க சக்பால், முஸ்லிம் குழந்தைகளுக்காக, மசூதிகளில் தொழுகையின்போது ஓதும் பாடல் ஒப்பித்தல் போட்டியை (அசான்) ஆன்-ைலைனில் நடத்தலாம் என அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சிவசேனாகட்சிப் பத்திரிகையான சாம்னாவில் நேற்று வெளிவந்துள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் வைப்பதால் அது சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஒலி மாசுவையும் ஏற்படுத்துகிறது. இதைதடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். எனவே மசூதிகளில் …

மேலும் .....

அஞ்சு விரல்களும் ஏழு வர்ணங்களும்

அஞ்சு விரல்களும் ஏழு வர்ணங்களும் கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ ▪︎நீங்க நெறைய வாக்குவாதங்கள டீவியில, மீடியாக்கள்ல, மேடைகள்ல பாத்துருப்பீங்க; கேட்டுருப்பீங்க. ஆனா… இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த தாருஸ் ஸலாம் மேடையில உங்களுக்கு முன்னாடி ஒரு சுவாரஸ்யமான, சுவையான, கலகலப்பான வாக்குவாதம் நடக்கப் போவுது. அத நீங்க பாக்கப் போறீங்க; கேக்கப் போறீங்க! ‘என்ன வாக்குவாதம்? யாரு பண்ணப் போறாங்க? நடுவரு யாரு?’ என்று கேக்குறீங்களா? நம்மள மாதிரி …

மேலும் .....