பதிவுகள்
Home / கட்டுரைகள்

கட்டுரைகள்

Ut wisi luctus ullamcorper. Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper

எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்

mursi

எகிப்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்.   இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…   எகிப்தின் ஜனாதிபதி…முர்ஸி   1977 ஆம் ஆண்டு இக்வான் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட முர்ஸி பலதரபட்ட திறமைகளையும், இயக்க உறவுகளையும் வளர்த்துக்கொண்டார் .சியோனிச எதிர்ப்பியக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவரான முஹம்மத் முர்ஸி பல சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகளிலும் அங்கம் வகித்தார்   பொறியாளரும் அமெரிக்காவில் உயர் கல்வி …

மேலும் .....

சதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி

isis

சதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் —————————————- ஐ.எஸ்.ஐ. பற்றியும் அதன் பொய் கலீஃபா அபூபக்கர் பக்தாதி பற்றியும் நாங்களெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்ததை நம் இளைஞர்கள் பலர் நம்பவில்லை.அந்த ஆளை தம்பி இன்னும் பலர் தம் வாழ்க்கையையும் மார்க்கத்தையும் தொலைத்துவிட்டு ,ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.அதன் விளைவுதான் இலங்கை கொடுமைகள். எங்கோ ஐரோப்பாவில் பள்ளிவாசலில் நடந்த கொடுந்தாக்குதலுக்கு இலங்கை தேவாலயங்களில் நடந்த தற்கொலை தாக்குதல் (அதுதான் காரணமாக …

மேலும் .....

தேசம் அபாயத்தையும், அவலத்தையும் நோக்கி பயணிக்கிறது. M.அப்துல் ரஹ்மான் Ex MP

Abdul Rahman IUML

தேசம் அபாயத்தையும், அவலத்தையும் நோக்கி பயணிக்கிறது பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நின்றிலங்கட்டுமாக! நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று தேர்தல் முடிவுகள் வருகிற மே 23ல் வரவிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் 17வது மக்களவை அமையவிருப்பதை நாம் மட்டுமல்ல; உலக நாடுகளே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தருணம் இது. காரணம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வெளியுறவு விவகாரங்களிலும் மாற்றங்கள் ஏற்படும் என்கிற …

மேலும் .....

Metoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி

Metoo_

பாலியல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு,தண்டனை வழங்கி, குற்றங்களைக் களைவதற்கு வழிவகை செய்யும் ஆக்கபூர்வமான குற்றவியல் சட்டங்கள் அநேகமான நாடுகளில் இல்லை.இருவரின் சம்மதுத்துடன் நடக்கும் பாலியல் அத்துமீறல் குற்றமாகவே கருதப்படுவதில்லை.பலவந்தமாக நடக்கும் பாலியல் உறவுகள் மட்டுமே குற்றம் என்கிறது பல நாடுகளின் சட்டம். பாலியல் பலுத்காரத்திற்கு வழங்கப்படும் தண்டனையாவது அர்த்தமுள்ளதாக இருக்கிறதா என்றால்,அதுவும் இல்லை.இக்குற்றத்தைப் புரியும் ஆண்கள் வெகுசுலபமாகத் தப்பித்துக்கொள்வதும் பெண்கள் மெளனமாகி ,மானத்திற்குப் பயந்து ஊமையாகிவிடுவதும் பழக்கமாகி விட்டன. பாலியல் …

மேலும் .....

வீடுகளை விபசார விடுதிகளாக்காதீர்கள் –

Cheating

திரு சாலமன் பாப்பையா அவர்களின் பதிவு… //தன் மனைவிக்குப் பக்கத்து வீட்டுக்காரனைப் பிடித்திருக்கிறது என்றால் அவனோடு படுத்துச் சுகம் அனுபவித்துவிட்டுவா..// 20 வயது தொட்ட பிறகும்கூட காதலைப் பற்றிய தெளிவு இல்லாமல் காமச் சகதியில் வழுக்கி விழுந்துகொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு, விழிப்புணர்வு தர யோக்கியதை இல்லை. ஆனால், வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் யாரோடும் பாலுறவில் ஈடுபடலாம் என்று தீர்ப்பளிக்க முடிகிறது. இந்தத் தீர்ப்பு அவர்கள் ஒழுக்கம் கெட்டு அலையவும் …

மேலும் .....

குழந்தைகளுக்கு நேரும் கொடூரம் -காக்கத் தவறுகிறோமா நாம்?

child-poverty

எனக்கு ஏழு வயது இருக்கும்போது, எனது தங்கையையும் அழைத்துக்கொண்டு ஏறத்தாழ மூன்று கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு அன்றாடம் நடந்தே செல்வேன். கிராமப்புறங்களில் பால்யம் கழிந்த நமது அப்பாக்களின், தாத்தாக்களின் தலைமுறையிலோ, அன்றாடம் சர்வசாதாரணமாகப் பல கிலோ மீட்டர் தூரங்களைக் கடந்து சின்னஞ்சிறு சிறுவர்களும், சிறுமிகளும் தனியாகப் பயணித்துவருவார்கள். இப்போதெல்லாம் ஒரு சிறுமியையோ, சிறுவனையோ சாலையில், தெருக்களில் தனித்துக் காண நேர்ந்தால் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. குழந்தைகள் இன்றைக்கு எத்தனை பெரிய …

மேலும் .....

மருந்துகளே வாழ்க்கை? எது ஆரோக்கியம்? எது மருத்துவம்?

அலோபதி

மருத்துவம் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஆங்கில மருத்துவம்தான். சுமார் இருநூற்றைம்பது ஆண்டு கால வெள்ளையர் ஆட்சி நமக்குத் தந்த சீதனங்களில் இந்த ஆங்கில மருத்துவமும் ஒன்று. நம்முடைய ஆதி மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஆங்கில மருத்துவ முறையை மறுதலித்துப் பிறந்த ஹோமியோபதி மருத்துவம், சீன மருத்துவ முறைகளான அக்குபஞ்சர், அக்குபிரஷர் என்று பல்வேறு மருத்துவ முறைகள் நம்மிடையே இருந்தாலும், மருத்துவம் …

மேலும் .....

ஒரு முன்னாள் நீதிபதியின் குமுறல்…!

chief-justice-india-ts-thakur

ஒரு முன்னாள் நீதிபதியின் குமுறல்…! *********************************************** அப்பாவியான, நிராயுதபாணியான, எந்தக் குற்றமும் செய்யாத முஸ்லிம்களை கும்பலாகச் சேர்ந்து அடித்தே கொல்கின்ற நிகழ்வுகள் அன்றாட நடப்புகளாய் ஆகிவிட்டுள்ள நிலையில்- நல்லிதயம் கொண்ட நல்லவர்கள் அனைவரும் இந்தச் சம்பவங்களைக் கேள்விப்பட்டும், பார்த்தும், படித்தும் மனம் வெதும்பி வேதனைப் பட்டுக் கொண்டிருக்கின்ற தருணத்தில்- நாட்டில் சட்டத்தின் ஆட்சி என்று ஒன்று இருக்கின்றதா? தடி எடுத்தவன் தண்டல்காரன் என்கிற காட்டாட்சி நிலைபெற்றுவிட்டதா என நாட்டு மக்கள் …

மேலும் .....

பன்மைச் சமூகமும் இஸ்லாமும் – சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி

Syed Sadatullah Husaini

பன்மைச் சமூகங்கள் குறித்து இரண்டு கோட்பாடுகள் இன்றையக் காலத்தில் மானுடவியல் வல்லுநர்களால் அதிகமாகப் பேசப்படுகின்றது. முதலாவது கோட்பாடு உருகுகின்ற பானை(Melting Pot) என்கிற பெயரில் அழைக்கப்படுகின்றது. இந்தக் கோட்பாட்டின்படி பன்மைச் சமூகம் ஒரு பானையாக உருவகப்படுத்தப்படுகின்றது. இந்தப் பானையில் ஊற்றப்படுகின்ற வெவ்வேறு பொருள்களும் உடைந்து, நொறுங்கி, உருகி, கரைந்து ஒற்றைப் பானமாக மாறிவிடுகின்றன. இந்தப் பானையில் இடப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் தம்முடைய தனித்தன்மையை, வண்ணத்தை, மணத்தை, சுவையை இழந்துவிடுகின்றன. இந்தப் …

மேலும் .....

ஞாநி – சில நினைவுகள்..- பேராசிரியர் மார்க்ஸ் அந்தோனிசாமி

ஞாநி -

ஞாநி – சில நினைவுகள்.. “””””””””””””””””””””””””””””””””””””””””” சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகள், நாடகம், அரசியல் விமர்சனம் என வாழ்ந்தவர் ஞாநி. பலவற்றில் அவர் முன்னோடி என நினைவுகூரத் தக்கவர். அவர் ஒரு நாடகாசிரியர் மட்டுமல்ல வீதி நாடகங்களை பிரபலப்படுத்தியவர்; சிறுவர்களுக்கான இதழியலில் பல புதுமைகளைச் செய்தவர் என்பன இப்போது அவரைப் பற்றிப் பேசும் எல்லோரும் மனம் நெகிழ்ந்து குறிப்பிடுபவை. வேறு சில துறைகளிலும் அவர் முன்னோடியாகச் செயல்பட்டுள்ளார். குறிப்பாக …

மேலும் .....