பதிவுகள்
Home / வரலாறு

வரலாறு

கொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்

கொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்…! சமுதாயச் சொந்தங்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஷரீஅத் கவுன்சிலின் பரிந்துரைகள். இதோ, இன்னும் சில நாள்களில் ஈதுல் அத்ஹா எனும் தியாகத் திருநாள் நம்மை வந்தடையவிருக்கின்றது. அந்த நன்னாள்களில் நாம் மேற்கொள்கின்ற முக்கியமான வழிபாடுதான் குர்பானி. கொரோனா நாளுக்கு நாள் உக்கிரமாகிக் கொண்டிருக்கின்ற சூழல், அரசாங்கம் விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக பெருநாள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த நிலைமையில் ஈதுல் அத்ஹா, …

மேலும் .....

நெருக்கடி நிலை காலத்தில் உம்மாவும் வாப்பாவும் – P.S.அப்துஸ்ஸலாம்

  1975 நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள் 45 ஆம் ஆண்டு நினைவு நாள்   ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தடை செய்யப்பட்ட நாள். ஜூன் 25 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது.   நெருக்கடி நிலை இந்திரா காந்தியின் நலனைக் காக்கவும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் கொண்டுவரப்பட்டது. தனி மனித உரிமைகள் தகர்த்தெறிய பட்டன. குடிமக்கள் அனுதினமும் அல்லல் …

மேலும் .....

“எங்களுக்கு அப்பாதான் எல்லாமே!” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்!

“எங்களுக்கு அப்பாதான் எல்லாமே!” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்!   குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை அணுகியவர், குஜராத் காவல்துறை அதிகாரியான சஞ்சீவ் பட் ஐ.பி.எஸ். அவரைப் பழிவாங்கும் நோக்கில் அவர் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளியது, மோடியின் பாசிச அரசு.   சர்வதேச தந்தையர் தினமான இன்று, அவரது குழந்தைகள் ஆகாஷி மற்றும், சாந்தனு …

மேலும் .....

சுவனத்துக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் பணி..!

அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) கற்பித்தல்  என்பது ஒரு  தொழிலல்ல புனிதமான பணி கற்பித்தல் என்பது ஒரு தொழிலல்ல. அது ஒரு புனிதமான பணி நபிமார்களின் பணி. நபி (ஸல்லல்லாஹு லைஹி வஸல்லம்) அவர்கள் தன்னை அறிமுகப் படுத்தும்போது கூறினார்கள்: “நான் இந்த உலகத்திற்கு ஓர் ஆசிரியனாக அனுப்பப்பட்டுள்ளேன்.” அல்லாஹுத் தஆலா நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அறிமுகப்படுத்தும் போது, “மக்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் போதிப்பவர் கற்றுக் கொடுப்பவர்” (அல்ஜுமுஆ: 2) என்று அறிமுகப்படுத்துகின்றான். …

மேலும் .....

நபிகள் வாழ்வில்: மாறாத புன்னகை – இக்வான் அமீர்

கடுமையான வெயிலில் தகித்துக் கொண்டிருந்தது பாலைவனம். நின்று இளைப்பாறுவதற்கும் வசதியில்லாத அந்த நிலப்பரப்பில் சுமக்க முடியாத சுமைகளுடன் ஒரு மூதாட்டி நடந்து கொண்டிருந்தாள். “எல்லாம் போச்சு… நாசமாய்ப் போச்சு. மூதாதையர்களின் வழிமுறைகள் எல்லாம் தகர்ந்து மண்ணோடு மண்ணாய் போச்சு நமது நம்பிக்கைகளைக் காப்பாற்றிக்கொள்ள இங்கிருந்து சென்றுவிடுவதுதான் ஒரே வழி. அப்படி என்னதான் மந்திரமிருக்கிறதோ அந்த அப்துல்லாஹ்வின் மகனிடம்! கேட்பவரெல்லாம் உடனே மாறிவிடுகிறார்களே அந்த முஹம்மதுவின் பேச்சைக் கேட்டு!” பாலை வெப்பத்தைவிட …

மேலும் .....

பிரியாணி சாப்பிட்டு இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டிஷ்காரர்…!

பிரியாணி சாப்பிட்டு இஸ்லாத்தை ஏற்ற பிரிட்டிஷ்காரர்…! பிரியாணி… பிரியாணி.. பிரியாணி என முகநூலே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

மேலும் .....

புத்தாண்டின் கூத்துகளும் கேளிக்கைகளும்

ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்…இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா…? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒருநாள்தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். தை 1 – தமிழ்ப் புத்தாண்டு யுஹாதி – தெலுங்குப் புத்தாண்டு முஹர்ரம் 1 – ஹிஜ்ரிப் புத்தாண்டு இப்படிப் பலப் பலப் புத்தாண்டுகள் கொண்டாடப் படுகின்றன. குறிப்பாக ஆங்கிலப் புத்தாண்டின் மூடத்தனமான வரலாறு …

மேலும் .....

இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்

இஸ்லாமியர்கள் கால்நடைகளை வேதனை தரும் முறையில் அறுப்பது ஏன்?

மேலும் .....

எனது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஃபாத்திமா

– கரன் புஜைரமி தமிழில்: ஜொஹரா சுல்தான் நான் இஸ்லாத்துக்கு எப்படி வந்து சேர்ந்தேன் எனப் பலர் என்னிடம் கேட்டதுண்டு. அப்போதெல்லாம் எனது வாழ்க்கைக் கதையின் சிறு பாகத்தை மட்டும் அவர்களோடு பகிர்ந்து கொள்வேன். ஆனால், இந்த அழகான மார்க்கத்தைத் தழுவிய என்னுடைய பயணத்தை இப்போது முழுமையாக எடுத்துரைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். 13 ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ட ஒரு கனவின் வழியாகத்தான் என் பயணம் …

மேலும் .....

பகலில் வரலாற்றை உருவாக்குகின்றேன்! – இக்வான் அமீர்

“நாங்கள் இரவு 11 மணிக்கு வழக்கம்போல தூங்கச் சென்றோம். இரவு 2 அல்லது 2.30 மணிக்கு நோன்பிற்காக சஹர் (நோன்புக்கால காலை உணவு) செய்தோம். சுமார் 4 மணிக்கு பங்களாவின் வாசலில் காலடிச் சத்தங்கள் கேட்டு விழித்துக் கொண்டேன். “யார் அது?” என வினவியதற்கு, “தாங்கள் தானா, மிஸ்டர் ஷவ்கத் அலி?” – என டிப்டி கமிஷனரான மிஸ்டர் புலூட்டன் கேட்டார். இவர்கள் கைது செய்ய வந்திருக்கிறார்கள் என உணர்ந்து …

மேலும் .....