பதிவுகள்
Home / அரசியல் / முஸ்லிம் லீக் தலைமை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா….!

முஸ்லிம் லீக் தலைமை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா….!

முஸ்லிம் லீக் தலைமை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா….!

  • எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் பத்திரிகையாளர்.
    ======================================

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த தேர்தலில் 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது, முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கோரிக்கையை ஏற்று, திமுக தலைமை கூடுதலாக 2 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆக, முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் கிடைத்து இருப்பது உண்மையிலே மகிழ்ச்சி அளிக்கிறது.

அதற்காக முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மற்றும் அக்கட்சியின் தேர்தல் பேச்சுவார்த்தை குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேநேரத்தில், பேராசிரியர் காதர் மொகிதீனிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்க விரும்புகிறோம்.

ஆசைப்படுகிறோம்.

கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, வாணியம்பாடியில், தமது கட்சியைச் சேர்ந்த எச்.அப்துல் பாசித்திற்கு மட்டுமே வாய்ப்பு அளித்தது.

மற்ற இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட இரண்டு பேரும், பெயரவுக்குதான் முஸ்லிம் லீகர்கள் என்ற புகார் எழுந்தது.

குறிப்பாக, தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் திருப்பூர் அல்தாப், மற்றும் நாகை தொகுதியில் போட்டியிட்ட வணிகர் ஆகிய இரண்டு பேரும் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், தேர்தலில் போட்டியிடுவதற்காகவே கடைசி நேரத்தில் அவர்கள் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்தார்கள் என்றும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதுபோன்ற, புகார்கள், குற்றச்சாட்டுகள், இந்த முறை வரக்கூடாது என்பது எமது விருப்பம்.

இம்முறை தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் கட்சியில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் தொண்டர்களுக்கும், உண்மையான ஊழியர்களுக்கும், சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

இதுதான் நமது கோரிக்கை.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், எமது கோரிக்கையை நிச்சயம் பரிசீலிப்பார் என உறுதியாக நம்புகிறோம்.

5 தொகுதிகளிலும் முஸ்லிம் லீக் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் சமுதாயத்திற்காக குரல் கொடுக்க, பணியாற்ற இப்போதே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

About idealvision

Check Also

கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க

கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க..! நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான உணவுகள் குறித்து விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர்._ கொரோனா தொற்றால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *