பதிவுகள்
Home / அரசியல் / தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஜமாஅத் தலைவர்கள்

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஜமாஅத் தலைவர்கள்

 

நாட்டின் தலைநகரமான புதுதில்லியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 123 வக்ஃப் சொத்துகளை மீட்கும் விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி தலைமையிலான ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உயர்நிலைக் குழுவினர் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்து வலியுறுத்தினர்.

தில்லியில் நிலவும் ஏராளமான மக்கள் பிரச்னைகள், சிறுபான்மையினர் தொடர்பான பிரச்னைகள் ஆகியன குறித்தும் விவாதித்தனர்.

123 வக்ஃப் சொத்துகளைத் திரும்ப ஒப்படைக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதன் இறுதி நாள்களில் உத்தரவு பிறப்பித்திருந்ததையும் குழுவினர் நினைவுகூர்ந்தனர்.

முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள்கூட இல்லாததை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

தில்லி அரசின் பள்ளிக்கூடங்களில் நிரப்பாமல் இருக்கின்ற உருது ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ஔரங்கசீப் சாலையின் பெயரை மாற்றிய செயல் தவறானது எனவும் ஜமாஅத் தலைவர்கள் எடுத்துக் கூறினர்.

பீகாரைப் போல தில்லியிலும் முழுமையான மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும் என்ற ஜமாஅத் தலைவர்களின் கோரிக்கைக்கு, மதுவுக்கு எதிரான எந்த வகைப் பரப்புரைக்கும் எனது முழு ஆதரவு உண்டு என கெஜ்ரிவால் பதிலளித்தார்.

முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் நிலம் கிடைத்தால் பள்ளிக்கூடங்களும் மருத்துவமனைகளும் தொடங்க தில்லி அரசு தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் தில்லி வக்ஃப் வாரியத்தின் தலைவருமான அமானத்துல்லாஹ் கானின் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

ஜமாஅத்தின் உயர்நிலைக் குழுவில் பொதுச்செயலாளர் முஹம்மத் ஸலீம், துணைத் தலைவர்கள் நுஸ்ரத் அலீ, சையத் ஸஆதத்துல்லாஹ் ஹுஸைனி, செயலாளர் முஹம்மத் அஹ்மத், காசிம் ரசூல் இல்யாஸ், அக்தர் கரீம் கித்வாயி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

= தகவல் – Syed Sultan

About idealvision

Check Also

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: என்ன செய்யப் போகிறோம்? பேராசிரியர் அ.மார்க்ஸ்

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: என்ன செய்யப் போகிறோம்? *** இன்று பணிநீக்கப்பட்டுள்ள நண்பர் ஹாஃபிஸ் “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்” என்கிற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *