பதிவுகள்
Home / அரசியல் / அவர்கள் வயிறார சாப்பிட்டார்கள், மற்றவருக்கும் சாப்பிடக் கொடுத்தார்கள்.

அவர்கள் வயிறார சாப்பிட்டார்கள், மற்றவருக்கும் சாப்பிடக் கொடுத்தார்கள்.

CLICK   –  இணைந்திருங்கள்  

இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகை நடந்து முடிந்தது.

இன்று
அவர்கள் பட்டாசு வெடித்து காற்றை மாசுபடுத்தவில்லை,

நிலத்தையும் குப்பையாக்கவில்லை.

சாயம் கலந்த பிளாஸ்டிக் பொருட்களை கரைத்து நீர் நிலையை மாசுபடுத்தவில்லை.

எதையும் சாலையில் போட்டு உடைத்து மற்றவருக்கு காயம் ஏற்படுத்தவில்லை.

சாலையில் நெருப்பு வைத்து கொளுத்தி பிறருக்கு இடையூறு தரவில்லை.

இன்றைக்கு அவர்கள் தொழுகையை பார்வையிட வந்த காவல் அதிகாரி இரத்தம் சொட்ட சொட்ட தாக்கப்படவில்லை.

இன்றைக்கு அவர்களுக்கு பயந்து யாரும் கடையை அடைக்கவில்லை.

இன்றைக்கு அவர்கள் யாரும் சினிமா தியேட்டர்களில் முண்டியடிக்கவில்லை.

டாஸ்மாக் கடைகளில் எந்த சிறப்பு விற்பனையும் இல்லை.

சண்டை சச்சரவு வெட்டுக்குத்து குழப்பம் எதுவும் நிகழவில்லை.

எந்தக் கடைக்காரரிடமும் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் காடைக்காரரைத் தாக்கவில்லை.

இன்று
அவர்கள் வயிறார சாப்பிட்டார்கள், மற்றவருக்கும் சாப்பிடக் கொடுத்தார்கள்.

இறைவனுக்காக பலி பிராணிகளை அறுத்து சாதி மதம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் இறைச்சியை வழங்கினார்கள்.

ஏழைகளுக்கு உதவி செய்ய குர்பானி பிராணிகளின் தோல்களை திரட்டினார்கள்.

எவ்வளவோ நன்மைகள்.
பண்டிகையிலும் கூட ஏழைகளின் நலன் கருதும் அவர்களுக்கு ஏன்டா தடை போடுறீங்க?

உன் தடை அவர்கள் அறுத்த மாடு போட்டச் சாணிக்கு சமானம்.

பழ.மாணிக்கம்.

About idealvision

Check Also

கொரோனா மட்டும்தான் கொல்கிறதா? – மரு.ஸ்ரீராம்

கொரோனா மட்டும்தான் கொல்கிறதா? கொரொனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பொது முடக்கத்தின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *