பதிவுகள்
Home / செய்திகள் / புதிய 2,000 ரூபாய் நோட்டுகளில் நேனோ ஜிபிஎஸ் சிப்?

புதிய 2,000 ரூபாய் நோட்டுகளில் நேனோ ஜிபிஎஸ் சிப்?

CLICK   –  இணைந்திருங்கள்  

புதிதாக வெளிவர உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளில் நேனோ ஜிபிஎஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளது என முன்னதாக கூறப்பட்ட நிலையில் அது அதிகாரப்பூர்வமற்ற தகவல் என தற்போது கூறப்படுகிறது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. நாளை முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் மக்கள் புழக்கத்திற்கு வர இருக்கின்றன.

ஆனால் கடந்த ஒரு வாரமாகவே, நாளை வெளியாக உள்ள 2,000 ரூபாய் நோட்டு குறித்த படங்கள் மற்றும் அதுகுறித்த செய்திகள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் வெளியானது. அதில் புதிதாக வெளியாக உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளில் புதிய முறை தொழில்நுட்பம் மூலம் நேனோ ஜிபிஎஸ் சிப் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

கருப்புப் பணத்தை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இந்த தொழில்நுட்பம் 2,000 ரூபாய் நோட்டுகளில் பொருத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

நேனோ ஜிபிஎஸ் சிப் மூலம், பணம் இருக்கும் இடத்தை எளிதாக கண்டறிய முடியும் எனவும் சொல்லப்பட்டு வந்தது. செயற்கைக் கோளில் இருந்தும் செல்லும் சமிக்ஞைகளை பெற்றுக் கொள்ளும் நேனோ ஜிபிஎஸ் சிப், பணம் இருக்கும் இடத்தையும், பணத்தின் சீரியல் எண்ணையும் திரும்பி செயற்கைக்கோளுக்கே செலுத்தும் என்றெல்லாம் கூறப்பட்டது. இதன் மூலம் பணத்தை தரைத்தளத்திற்கு கீழ் 120 மீட்டர் தொலைவிலும் ஒளித்து வைத்தால் கூட எளிமையாக கண்டறிய முடியும் எனவும் இது வருமான வரித்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் முன்னர் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமற்றவை என்பது தற்போது தெரியவந்துள்ளது. பொதுவாக உட்புற அறைகளில் இருக்கும் போது செயற்கைக் கோளுடன் சமிக்ஞைகளை பரிமாற்றுவது என்பதே கடினமான காரியம். அப்படியிருக்க, தரைத்தளத்திற்கு கீழே 120 மீட்டர் தொலைவில் உள்ள பணத்தின் நேனோ ஜிபிஎஸ் சிப் எவ்வாறு செயற்கைகோளுடன் சமிக்ஞைகளை பரிமாறிக் கொள்ளும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. மேலும் இது முடியாத காரியம் என்றும் பரவலாக சொல்லப்படுகிறது. எனவே 2,000 ரூபாய் நோட்டுகளில் நேனோ ஜிபிஎஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளது என்பது பொய்யான தகவலே என்று கூறப்படுகிறது.

About idealvision

Check Also

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: என்ன செய்யப் போகிறோம்? பேராசிரியர் அ.மார்க்ஸ்

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: என்ன செய்யப் போகிறோம்? *** இன்று பணிநீக்கப்பட்டுள்ள நண்பர் ஹாஃபிஸ் “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்” என்கிற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *