பதிவுகள்
Home / ஆரோக்கியம் / இப்படி வீணாக்கினால் அழாமல் என்ன செய்ய?- சமுத்திரக்கனி
வாழை இலை சாப்பாடு

இப்படி வீணாக்கினால் அழாமல் என்ன செய்ய?- சமுத்திரக்கனி

CLICK – இணைந்திருங்கள்

சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது,
உற்று கவனித்தேன்..

தட்டிற்கு வெளியே இரண்டு சோற்று பருக்கைகள் இறைந்து கிடந்தன,

அவைதாம் அழுதுகொண்டிருந்தன. “எதுக்கு இப்படி அழறீங்க”
என்று கேட்டேன்?.

அதில் ஒன்று கண்ணீரோடு தன் கதையைச் சொன்னது.

“ஒரு ஏழை விவசாயி…
கடனை உடனை வாங்கி விதை நெல் போட்டு, வயலை உழுது,
நாற்று நட்டு, களை பறித்து, பயிர் செய்து,  நீர் பாய்ச்சி ரொம்ப
கஷ்டப்பட்டு எங்களை வளரவைத்தார்..

நாங்களும் நல்லா வளர்ந்தோம், என்னோட சகோதர மணிகளில்
சிலரை எலிகள் நாசம் செய்தன..  பறவைகள் கொத்தித் தின்றன..
தப்பிப் பிழைத்த நாங்கள்அறுவடைக்குத் தயாரானோம்.

அறுத்து, களத்துக்கு கொண்டு வந்து, தூற்றி அதிலும் வீணாகிப்போன
சகோதரமணிகள் தவிர்த்து பெரிய பெரிய பைகளில் எங்களை அடைத்து வைத்தார்கள்.

அப்புறம் நெல் மணிகளிலிருந்து உமி நீக்கி எங்கள போது காணாமல் போன
சகோதரமணிகள் நிறைய பேர். விற்பனைக்கு கடையில் வைத்திருக்கும் போது மூட்டைகளில் விழுந்த ஓட்டைகளில்சிலரும், எடை போட்ட போது கொஞ்சம் பேரும்
வீட்டுக்கு நீங்கள் வாங்கி வந்த போது, அரிசி களைந்து சமைக்கும்போது  என்று எல்லாவற்றிலும் தப்பிப்பிழைத்து உங்களுக்கு உணவாகி உங்க 
தட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

இத்தனை பேர் உழைப்பில் விளைந்தஎன்னை..  பல
இடர்ப்பாடுகளை கடந்து வந்த என்னை.. இப்படி வீணாக்கினால்
அழாமல் என்ன செய்ய?” என்றது.

உணவை வீணாக்காதீர்கள்;
உழைப்பையும்!.

—  சமுத்திரக்கனி

About idealvision

Check Also

medicine

விலங்குகளுக்கு பதிலாக மனிதர்களுக்கு மருந்து கொடுத்து சோதித்த நிறுவனம்:

விலங்குகளுக்கு பதிலாக மனிதர்களுக்கு மருந்து கொடுத்து சோதித்த நிறுவனம்: ஆபத்தான நிலையில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதி ராஜஸ்தானைச் சேர்ந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *