Saturday , September 19 2020
பதிவுகள்
Home / ஆரோக்கியம் / ரோட்டோர கடைகளில் காளான் சாப்பிடலாமா?
காளான் சாப்பிடலாமா

ரோட்டோர கடைகளில் காளான் சாப்பிடலாமா?

CLICK – இணைந்திருங்கள்

ரோட்டோர கடைகளில் காளான் சாப்பிடலாமா? உண்மையில் அது காளான் தானா? அதிர்ச்சியூட்டும் உண்மை – 

நம்மில் பலர் ரோட்டோர கடைகளில் பானிபூரி, மசால் பூரி, பேல் பூரி, காளான் என பல பதார்த்தங்களை ருசித்து ருசித்து சாப்பிடிருப்போம். விலை குறைவு, சுவை அதிகம் என்பதால், இது போன்ற கடைகளுக்கு தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் வரவேற்பு அதிகம்.

இந்த உணவுகளின் சுவையை பார்க்கும் நாம், இவற்றை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீங்கைப் பற்றி கலைப்படுவதில்லை. பெரும்பாலான கடைகளில் காளான் என்ற பெயரில் விற்கப்படும் உணவில் இருப்பது காளான் இல்லை என்பதே உண்மை.

காளான் இல்லை என்றால் வேற என்ன? என கேட்கிறீர்களா?…

முட்டைக்கோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து எடுத்ததை தான் காளான் என்கிறார்கள். இதனுடன், சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபிபவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி கலவையை வேக வைத்து வாடிக்கையாளருக்கு தட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாவை சுண்டியிழுக்கிறது; இதுவே, காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.

இதையறியாத பலரும் காளான் சுவையை மனதில் நினைத்தபடி, போலி காளான் உணவுககளை விரும்பி சுவைக்கின்றனர். இவ்வகையான காரம், ஜிலேபி பவுடர், அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ், மைதாமாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.

மேலும், ஒருமுறை உணவை வேகவைக்கப் பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுதன்மை கலந்து, ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது. இது போன்ற உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்புச் சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

எனினும், வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடிப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் விற்பனை சூடுபிடிக்கிறது.

+++++++++++++++++++++++++++++++++++++++++

“சாலை ஓரக் கடைகளில் விற்கப்படும், எந்த உணவும் சுகாதாரமானது என்று உறுதியளிக்க முடியாது. காளான்கள் சத்துமிகுந்ததாக இருப்பினும், சாலையோரக் கடைகளில் உண்பதைத் தவிர்த்துவிடுவதே நல்லது. ஏனெனில், சாலை ஓரக் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கும், தரமற்ற காளான்களைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. தரமான காளான்களை வீட்டில் வாங்கி சமைப்பது நல்லது. எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம்.

காளான்களில் புரதச்சத்து மிகுதியாக உள்ளது. சூரிய ஒளியில் இருந்து மட்டுமே அதிகமாக கிடைக்கக்கூடிய வைட்டமின் டி, பி சத்துக்கள் மற்றும் செலினியம் எனும் தாதுப் பொருளும் இதில் உள்ளன. ஆன்டி ஆக்ஸிடன்டாகவும் செயல்படுகிறது. மேலும், இதில் உள்ள ஆன்டி-கார்சினோஜெனிக் (Anti-carcinogenic), கேன்சர் வராமல் தடுக்கும் காரணி. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதில் கொழுப்புச் சத்து மிகக் குறைவு.

காளான்கள் வாங்கும்போது பார்த்து வாங்க வேண்டும். சில வகை காளான்கள் விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். இவற்றை சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு, சுவாசப் பிரச்னை, வாந்தி, பேதி போன்றவை ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகூட ஏற்படலாம். சில வகை காளான்கள் (Inocybe species) உயிருக்கே ஆபத்தாகும் வாய்ப்புள்ளது. தரமான காளான்கள் வாங்கினால், அவை நிச்சயம் ஆரோக்கியத்தைக் கூட்டும்.”

  • தில்ஷத் பேகம்,  ஊட்டச்சத்து நிபுணர், சென்னை.

About idealvision

Check Also

Mrs.Ranjeet Ranjan,

பாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..

பாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து.. இவர் ரஞ்சித் ரஞ்ஜன். பீகார் மாநிலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நாடாளுமன்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *