பதிவுகள்
Home / செய்திகள் / கோவையில் வட்டியில்லா கூட்டுறவு வங்கி
சங்கமம் கூட்டுறவு வங்கி

கோவையில் வட்டியில்லா கூட்டுறவு வங்கி

CLICK – இணைந்திருங்கள்

கோவையில் வட்டியில்ல கூட்டுறவு வங்கி.
*************************************************
சங்கமம் கூட்டுறவு வங்கி கோவை கிளை அறிமுக நிகழ்ச்சி

09-04-2017 ஞாயிறு மாலை 7 மணிக்கு கோவை போத்தனூர்பாத்திமா கல்யாண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது

ஒவ்வொரு இஸ்லாமியர்களும் தன் மார்க்கத்தின் எதிரியாக நினைக்கும் ஒரு செயல் உண்டு எனில் அது வட்டி வரவு செலவு தான்.

நபி (ஸல்) கூறினார்கள் யார் வட்டியுடன் தொடர்பு வைத்துள்ளார்களோ அவர்கள் நிச்சயமாக அல்லாஹுவுடன் போர் புரிய தயாராகி விட்டார்கள்.

யார் மக்களை நரகத்தின் பாதையில் காப்பாற்றி சொர்க்கத்தின் பாதைக்கு அழைத்து செல்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹுவின் புறத்திலிருந்து சுபசெய்தி உண்டு. இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு வெற்றி உண்டு.

அவசர தேவைக்கு, மருத்துவ தேவைக்கு, பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு, சிறு, குறு தொழிலின் முதலீடுக்கு கூட பணம் இல்லாமல் என அடகு கடைக்கும், வட்டி கடைக்கும் சென்று தன் முழு வருமானத்தையும் வட்டிக்கு செலுத்தியே நலிவடைந்துள்ளனர். ஏன் நம் வீட்டு பெண்களின் மானமும் கற்ப்பும் விலை பேசப்பட்ட அவலங்கள் கூட  பல பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

வட்டி கொடுக்கல் வாங்களினால் கவலையும், துன்பமும் நடுத்தர மக்களின் பிரியா உறவாய் மாறிவிட்டது. இந்நிலையை இஸ்லாமிய சமூகத்தில் இருந்து வட்டி களையவே அல்லாஹுவின் கிருபையால் சங்கமம் கூட்டுறவு வங்கி சேவை, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி உள்ளடக்கிய மாநிலங்களில் துவங்கப்பட்டது.Sanghamam MultiState Co-operative

இதுவரை  8 கிளைகளையும், தனது 9 கிளையை கோவை நகரில் துவங்கப்பட்டது . இதன் மூலம் கோவையில்  வட்டியின் கொடுமைகள் முழுமையாக தீர்க்கப்பட்டு இறைவனின் விருப்பத்திற்குறிய சமூகமாக மாற முடியும்.

வறுமையில் வாடும் மக்களை காப்பாற்றிட, வட்டியில்லா பொருளாதாரத்தை மேம்படுத்திட, சிறு தொழில்களுக்கு வட்டியில்லா  கடன் வழங்குவதன் மூலம் நடுத்தர மக்களின் வாழ்வை முன்னேற்றிட போன்ற சமூக மேம்பாட்டை நோக்கிய இந்த மகத்தான முயற்சியில் இணைய ஆலிம்கள், சமூக தலைவர்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளம் கொண்டவர்கள் வட்டி என்ற கொடுமையை ஒழிக்க தன்னால் இயன்ற ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும்.

http://sangamam.in/

 

About idealvision

Check Also

வைகோ

வரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ

வரலாறு உங்களை மன்னிக்காது பாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *