பதிவுகள்
Home / ஆய்வுக்கட்டுரைகள் / முகநூல் நண்பர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள்
முகநூல்

முகநூல் நண்பர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள்

CLICK – இணைந்திருங்கள்

முகநூல் நண்பர்களுக்கு சில முக்கியக் குறிப்புகள்
*********************************************************
முகநூலை முகநூலாகவே வைத்திருக்க வேண்டும்.

தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும்,
எண்ணங்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்துக் கொள்வதற்கும் இன்றையக் காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள நல்ல அருள்வளம்தாம் முகநூல்…

உடனுக்குடன் செய்திகளை அறிந்துக் கொள்வதற்கும் பரப்புவதற்கும் இது மிகவும் பயனுள்ளதாகத்தான் இருக்கின்றது.
என்றாலும் முகநூல் முகநூல்தான்.

முகநூலின் குறைபாடுகளையும் மறந்துவிடக் கூடாது.

1. சில சமயம் தவறான செய்திகள் பரவுவதற்கும் முகநூல் காரணமாகிவிடுகின்றது. மோடியைப் பற்றிய தவறான பிம்பம் மக்கள் மத்தியில் திணிக்கப்படுவதற்கு முகநூலும் ஒரு காரணம்தானே.

2. சில சமயம் நல்லெண்ணத்துடன் எழுதப்படுகின்ற வாசகங்களும் தவறான கோணத்தில் வாசிக்கப்பட்டு தவறான முடிவுகளுக்கு வித்திடுவதற்கும் முகநூல் வழி வகுத்துவிடுகின்றது. தொடர்ந்து பின்னூட்டங்கள் என்கிற வடிவில் கிளம்புகின்ற விவாதம் சில சமயம் நேரத்தை விழுங்குகின்ற, எதிர் மறையான உணர்வுகளில் தள்ளி விடுகின்ற சதுப்பு நிலங்களாய் மாறிப் போகின்றன.

3. சில சமயம் நம்முடைய முன்னுரிமைகளைத் தீர்மானிப்பதாய் முகநூலின் நியூஸ் ஃபீட் அமைந்துவிடுகின்றது. விழிப்போடு இருந்து செட்டிங்ஸை மாற்றி அமைக்காவிட்டால் பிரச்னையின் அனைத்துப் பரிமாணங்களும் உங்களின் கண்களில் படாமலே போய்விடும்.

4. சில சமயம் வேடிக்கையான, அபத்தமான, பார்த்தால் ரசிக்கவும் சிரிக்கவும் தூண்டுகின்ற வீடியோக்கள் நியூஸ் ஃபீடில் வந்துவிடுகின்றன. அவற்றைத் தவிர்க்கின்ற வகையில் நம்முடைய செட்டிங்ஸை அமைக்காவிட்டால் அவை நம்முடைய நேரத்தைத் திருடி விடும்.

5. எல்லாவற்றுக்கும் மேலாக முகநூல் உங்களின் அடிப்படை அடையாளத்தையே மாற்றி அமைத்துவிடக்கூடிய ஆபத்து நிறைந்ததாய் இருக்கின்றது. இறைவனின் உவப்பைப் பெறுவதை இறைவனின் லைக்குகளைப் பெறுவதை வாழ்வின் முதன்மை நோக்கமாகக் கொள்ள வேண்டியவர்கள் தன்னைத்தானே லைக்கு செய்பவர்களாய் மாறிவிடுகின்ற ஆபத்து சாதாரணமான ஆபத்து அல்ல.

6. முகநூல் போராளி; முகநூல் பிரபலம்; போன்ற சொற்றொடர்கள் மாய உலகில் உங்களைத் தள்ளிவிடக் கூடியவை. உண்மையான போராளி களத்தில் – இரத்தமும் சதையும் கொண்ட மனிதர்கள் மத்தியில் – கோபமும் அன்பும் நிறைந்த உள்ளங்கள் மத்தியில் புழங்குவானே தவிர முகநூலில் அல்ல.

எனவே முகநூல் நண்பர்களே, இந்த ஆறு குறிப்புகளை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். வெற்றி பெறுவீர்கள்.

  • அஜீஸ் லுத்புல்லாஹ்

About idealvision

Check Also

பிறை 26

பிறை 26 – படிப்பினை தரும் பண்டிகை

பிறை நிலாக் காலம் — பிறை 26 வி.எஸ்.முஹம்மது அமீன்   படிப்பினை தரும் பண்டிகை   இஸ்லாமியர்களுக்கு இரண்டே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *