பதிவுகள்
Home / அரசியல் / 2-வது ஆண்டாக அடைக்கலம் தந்த மசூதி: உணவு, குடிநீர் வழங்கி உபசரிப்பு – வீடியோ

2-வது ஆண்டாக அடைக்கலம் தந்த மசூதி: உணவு, குடிநீர் வழங்கி உபசரிப்பு – வீடியோ

CLICK – இணைந்திருங்கள்

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த அலுவா நகரில் வாதி ஹிரா அறக்கட்டளைக்கு சொந்தமான மசூதி உள்ளது. இதற்கு எதிரில் சிவகிரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர் கடும் வெயிலில் பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர். வெகு தொலைவில் இருந்து வந்ததால் களைப்புடன் காணப்பட்ட அவர்கள் உணவு மற்றும் குடிநீருக்காக அல்லல்பட்டனர்.

இதைப் பார்த்த அந்த அறக்கட்டளையின் செயலாளர் முகமது நவாஸ் மற்றும் உள்ளூர்வாசிகள், வெயிலில் காத்திருந்த அனைவரையும் மசூதி வளாகத்துக்குள் அழைத்துச் சென்று நிழலில் அமர வைத்தனர். பின்னர் அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கி உபசரித்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக கேரளா மட்டுமல்லாது தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சிவகிரி பள்ளிக்கு வந்திருந்தனர்.

மாணவர்கள் தேர்வெழுத சென்றதும் காத்திருந்த பெற்றோரை மசூதி வளாகத்துக்குள் அழைத்துச் சென்ற வாதி ஹிரா அறக்கட்டளை நிர்வாகத்தினர், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி உபசரித்தனர். ஆனால் இந்த முறை முன்கூட்டியே இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதனால் சுமார் 1,200 மாணவர்களின் பெற்றோர் மசூதி நிர்வாகத்தினருக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

 

About idealvision

Check Also

வைகோ

வரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ

வரலாறு உங்களை மன்னிக்காது பாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *