Saturday , September 19 2020
பதிவுகள்
Home / அரசியல் / சர்தார் பட்டேல் சிலை, உண்மையில் இந்தியர்களான நமக்கு பெருமிதமான விஷயமா?
sardhar

சர்தார் பட்டேல் சிலை, உண்மையில் இந்தியர்களான நமக்கு பெருமிதமான விஷயமா?

CLICK – இணைந்திருங்கள்

உலகின் உயரமான சிலையான சர்தார் பட்டேல் ஒற்றுமை சிலை இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது. தங்களது பெருமிதத்தை வெளிப்படுத்தி கொள்ள ஒரு அடையாளம் கிடைத்துள்ளதாக இந்தியர்கள் நினைக்கிறார்கள்.

நிகில் ராம்பல்

உலகின் உயரமான சிலையான சர்தார் பட்டேல் ஒற்றுமை சிலை இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது. தங்களது பெருமிதத்தை வெளிப்படுத்தி கொள்ள ஒரு அடையாளம் கிடைத்துள்ளதாக இந்தியர்கள் நினைக்கிறார்கள். இந்த சிலையினால் இந்தியாவிற்கு பெருமையும் லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாவாசிகளும் வருவார்கள் என நீங்கள் நினைப்பீர்கள் என்றால், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்த சிலைக்கு முன்னர், உலகத்தின் உயரமான சிலை எது? அது எங்குள்ளது?

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை நீங்கள் கூறினால், அது தவறு. உலகத்தின் உயரமான சிலை எங்குள்ளது என்பதை தெரியாத லட்சக்கணக்கானவர்களில் நீங்களும் ஒருவர். அவ்வளவே! இதன்மூலம், சர்தார் பட்டேலின் ஒற்றுமை சிலை எந்தளவிற்கு மதிப்புடையது என்பது போக போகத் தான் தெரியும். சொல்ல மறந்துவிட்டனே, இப்போதுவரை உலகத்தின் உயரமான சிலை சீனாவில் உள்ள புத்தர் சிலை ஆகும். இப்படியொரு சிலை இருப்பதே நமக்கு தெரியாது என சங்கடப்படாதீர்கள். ஏனென்றால், சீனாவின் சிறந்த 10 சுற்றுலா இடங்களில் இது ஒருபோதும் இடம்பெற்றதே இல்லை. சீனப் பெருஞ்சுவர், டெரக்கோட்டா ரானுவம் மற்றும் தடைசெய்யப்பட்ட நகரம் என இந்த மூன்றும் தான் சீனாவின் முக்கியமான சுற்றுலா தளங்கள். இந்த மூன்று இடங்களுக்கும் ஒரு பொதுவான அம்சம் உள்ளது. அது என்னவென்று யோசியுங்கள் பார்ப்போம்? ஆம், இவை யாவும் வரலாற்றுப்பூர்வமான கலாச்சார அதிசியங்கள்.

உலகம் முழுவதும், நவீன கட்டுமானங்களை விட வரலாற்று சின்னமும் இடங்களுமே அதிக சுற்றுலாவாசிகளை ஈர்க்கிறது. அதனால் தான் பிரான்சின் ஈஃபிள் கோபுரத்தை பார்வையிட வருடத்திற்கு 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகிறார்கள். அதே சமயத்தில், உலகத்தின் உயரமான கட்டிடமாக இருந்தும், துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தை பார்வையிட வருடத்திற்கு 20 லட்சம் மக்கள் மட்டுமே வருகிறார்கள்.
இந்தியாவின் அதிசியங்களில் ஒன்றான தாஜ்மஹாலை விட சர்தார் பட்டேலின் ஒற்றுமை சிலை அதிக சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் என நம்புவதற்கு நம்மிடம் எந்த காரணமும் இல்லை. தனது அரசியல் ஆதாயத்திற்காக, தாஜ்மஹாலை சிறுமைப்படுத்தும் பாஜக எம்எல்ஏ சங்கீத் சோமை பிறகு பார்ப்போம்.

சர்தார் பட்டேல் சிலை என்பது ஒறு அரசியல் குறியீடு. இதனால் இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரத்திற்கும் வரலாற்றிற்கும் எந்த பயனும் இல்லை. நமது நாட்டில் கணக்கில் அடங்கா வரலாற்று சின்னங்களும் கலாச்சார சின்னங்களும் நிரம்பியுள்ள்ன. ஆனால், அதை பரமாரிக்கவே நம்மிடம் போதுமான பணம் இல்லை. 36 உலக பாரம்பரிய சின்னம் உள்பட 3600-க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்கள் இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை பராமரிக்கவே தனியாரின் உதவியை நாடி வருகிறது அரசு. முக்கியமாக, தன் கீழுள்ள நினைவுச்சின்னங்களை பாதுகாக்க செலவழிக்கும் தொகையை விட அதிகமான தொகையை தனது தலைமை அலுவலகத்தை கட்டுவதற்கு செலவழித்துள்ளது அகழ்வாராய்ச்சி துறை.
அதிலும் 116 நினைவுச்சின்னங்கள் மட்டுமே இப்போதுவரை வருவாய் ஈட்டுகிறது. ஒரு சிலைக்காக 3000 கோடி செலவழிப்பதற்கு பதில், தாஜ்மஹால் உள்ளிட்ட இத்தகைய நினைவுச் சின்னங்களை மேம்பட்டுத்தினாலே நமது சுற்றுலாத்துறைக்கு ஊக்கம் அளித்தது போல் இருகும்.

பொருளாதார ரீதியாக பார்த்தாலும் , இந்த சிலையால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பயன் இல்லை. வருடத்திற்கு 80 லட்சம் பார்வையாளர்களை ஈர்க்கும் தாஜ்மஹால், வருடத்திற்கு 25 கோடி வருமானம் ஈட்டுகிறது. இதில் பத்து சதவீத சுற்றுலாவாசிகளாவது சர்தார் பட்டேலின் சிலையை பார்வையிட வருவார்கள் என நம்புவோம். ஒருவேளை, சர்தார் பட்டேல் ஒற்றுமை சிலை, தாஜ்மஹால் அளவிற்கு பிரபலம் அடைந்தால் கூட, செலவு தொகையை ஈட்டவே 120 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதில் பராமரிப்பு செலவையும் சேர்த்தால், லாபம் அடைவதற்கு வாய்ப்பேயில்லை. சிலைக்கு அருகில் பார்வையாளர் மையம், உணவகம், அருங்காட்சியகம் என  அமைத்து வருமானம் ஈட்ட வய்ப்புள்ளது என சிலர் கூறலாம். ஆனால், அரசு கஜானாவில் இதற்கெல்லாம் பணம் இருக்கிறதா என்ன?

சர்தார் பட்டேல் சிலை கட்டுவதற்கான மொத்த செலவு, தோராயமாக 3000 கோடி. இதில் சிலை (182 அடி) கட்டுவதற்கு மட்டுமே 1347 கோடி செலவாகியுள்ளது. சீனாவில் உள்ள 128 அடி உயரமான புத்தர் சிலையை கட்டுவதற்கு 200 கோடிக்கும் குறைவாகவே செலவாகியுள்ளது.  ஆனால், இங்கு அதைவிட பத்து மடங்கு அதிகமாக செலவாகியுள்ளதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சர்தார் பட்டேல் சிலை கட்டுவதற்காக தங்களது நிலங்களை அபகரித்துவிட்டதாக அங்குள்ள பழங்குடி மக்கள் மாநில அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். முக்கியமாக, இந்த சிலை கட்டுவதற்கு சீன தொழிலாளர்களும் உதவி புரிந்துள்ளனர். இப்படி, சர்தார் பட்டேலின் சிலை குறித்து பல கேள்விகள் உள்ள நிலையில், அரசியல் ஆதாயம் என்ற நியாயப்படுத்தலே நமக்கு பதிலாக கிடைக்கிறது.
“இரும்பு மனிதர் சர்தார் பட்டேல் இன்று உயிரோடு இருந்தால், இந்த பிரம்மாண்ட தவறுக்கு என்ன பதில் அளித்திருப்பார்?” இக்கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டு கொள்ளுங்கள்.
தமிழில்: V. கோபி

நன்றி: Karuppu Tv

About idealvision

Check Also

சஞ்சீவ் பட்

“எங்களுக்கு அப்பாதான் எல்லாமே!” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்!

“எங்களுக்கு அப்பாதான் எல்லாமே!” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்!   குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *