பதிவுகள்
Home / அழைப்பியல் / பிறை -1 – நோன்பைக் கொண்டுவரும் ரமளான் பிறை
பிறை 1

பிறை -1 – நோன்பைக் கொண்டுவரும் ரமளான் பிறை

CLICK – இணைந்திருங்கள்

பிறை -1

– வி.எஸ். முஹம்மத் அமீன்
முஹர்ரம்.

இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம்.

அடுத்து ஸபர். தொடர்ந்து ரபிய்யுல் அவ்வல், ரபிய்யுல் ஆகிர், ஜமாத்தில் அவ்வல், ஜமாத்தில் ஆகிர், ரஜப், ஷஅபான், ரமளான், ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ். இந்தப் பன்னிரெண்டு மாதங்களில் ஒன்பதாவது மாதம்தான் ரமளான்.

ஹிஜ்ரி ஆண்டின் ஒவ்வொரு மாதத்தையும் பிறையைக் கொண்டே கணக்கிடுவர்.பிறை தென்பட்டால்தான் மாதம் தொடங்கும். மேகமூட்டங்களுக்குள் பிறை கண்ணாமூச்சி விளையாடினால் அந்த மாதம் முப்பதாகக் கணக்கிடப்பட்டு மறுநாள் மறுமாதம் தொடங்கிவிடும்.

இந்த ஆண்டு (ஹிஜ்ரி 1440) ஷஅபான் மாதம் பிறை 29இல் புதிய பிறை தென்படவில்லை. எனவே ஷஅபான் மாதம் முப்பது நாள்களாகக் கணக்கிடப்பட்டு இன்று ரமளான் பிறை ஒன்றாகிவிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ரமளான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு நோற்க வேண்டும். இது ஐந்து இஸ்லாமியக் கடமைகளில் ஒன்று.

அதுபோலவே பிறை வளர்ந்து, தேய்ந்து மீண்டும் பிறை தென்பட்டால் அன்றுதான் நோன்புப் பெருநாள். எனவே சில ஆண்டுகளில் 29 நோன்புகள்; சில ஆண்டுகளில் 30 நோன்புகள்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்

‘பிறை கண்டு நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். பிறை கண்டு நோன்பை நிறைவு செய்யுங்கள். பிறை தென்படாவிட்டால் அந்த மாதத்தை முப்பது நாள்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.’

இதோ வளமார் பிறை வந்துவிட்டது.
நோன்பு நோற்க வேண்டும். எப்படி? இன்ஷா அல்லாஹ் நாளை…

– பிறை வளரும்.. பிறை – 2 நோன்பு நோற்பது எப்படி?

About idealvision

Check Also

class room

ஆசிரியர்களே ஆதிப்பாடம் போதியுங்கள்

– வி.எஸ். முஹம்மத் அமீன் 1. கல்வியின் நோக்கம் போதியுங்கள் என்ன படிக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருவதுதான் பள்ளிக்கூடம். எப்படிப் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *