பதிவுகள்
Home / அழைப்பியல் / பிறை 12 – இஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்

பிறை 12 – இஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்

CLICK – இணைந்திருங்கள்
‘ஒன்றே குலம்.ஒருவனே தேவன்’ என்று இஸ்லாத்தின் சாராம்சத்தை ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.குலம் ஒன்று என்றால் இறைவனும் ஒன்றுதான்.ஓரிறைக் கொள்கை என்பது இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம்.மனிதகுலம் அனைத்திற்கும் ஆதிப் பெற்றோர் ஒருவரே! ஒரே
ஆண் பெண்ணிலிருந்துதான் மனித சமுதாயம் தோன்றியது.
இறைவன் கூறுகிறான்
‘மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.மேலும் அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்.’
                                                                       திருக்குர்ஆன் 4:1
இன்று உலகின் மக்கள் தொகை 700 கோடி.1987இல் 500 கோடி. இன்னும் சில ஆண்டுகள் பின்னோக்கிப் போனால் 100 கோடி. இன்னும் பின்னால்.. இன்னும் இன்னும் பின்னால் போனால் சில லட்சம்..சில ஆயிரம்…சில நூறு இறுதியில் ஒரு ஆண் பெண்தான் மனித உற்பத்தியின் மையப்புள்ளியாக இருப்பர்.
இப்போது சொல்லுங்கள்! ஒரே ஆதிப் பெற்றோரிலிருந்து தோன்றிய மனிதனில் எங்கிருந்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் வந்தான்?ஆதத்தின் பிள்ளைகள் அனைவரும் சமமானவர்கள்.அதனால்தான் தொழுகை அனைவரையும் ஒரே வரிசையில் நிறுத்துகிறது.ஏழை,பணக்காரன் படித்தவன் பாமரன் என்ற எந்தப் பாகுபாடும் இல்லை.
தொழுகை ஏற்படுத்திய உள்ளூர் சமத்துவம் ஹஜ்ஜில் உலகளாவிய சமத்துவமாக விரிவடைகிறது.மக்காவிலுள்ள கஅபாவில் அமெரிக்க வெள்ளையரும் இருப்பர்.ஆப்பிரிக்க கருப்பரும் இருப்பர். நிறப்பாகுபாடு இல்லை. மொழி,இனம்,பணம்,படிப்பு என்ற எந்த வேறுபாடுமின்றி ஒற்றைச் சுழலில்
தோள் உரசித்தான் செல்லவேண்டும்.
நோன்பும் அத்தகைய சமத்துவத்தை அழுத்தமாகச் செயல்படுத்துகிறது.உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ரமளானில் ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பு நோற்க வேண்டும்.அரபு நாட்டின் மன்னரும் பட்டினி கிடக்க வேண்டும்.அங்கு வேலை பார்க்கும் கூலித்தொழிலாளியும் பட்டினி கிடக்க வேண்டும்.
எல்லாருக்கும் ஒரே நேரம்தான்.அதிகாலை 4:30க்குள் மன்னரானாலும் நோன்பைத் தொடங்கிவிட வேண்டும்.மாலை 6:39க்கு நோன்பைத் துறந்துவிட வேண்டும்.எல்லாருக்கும் ஒரே சட்டம்.ஒரே விதிமுறைதான்.அனைவரும் அடிமைகள்.இறைவன் ஒருவனே எஜமானன்.
இந்த சமத்துவத்தின் ஒளியில்தான் மனித நேயம் மலர்கிறது.மனித நேயம் என்ற மகத்தான நன்மையை நோன்பு வாரி வழங்குகிறது. நோன்பில் மனித நேயமா?எப்படி?
நேயம் சொல்லும் வரை
காத்திருக்கும் நாளைய பிறை

About idealvision

Check Also

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா? அ. முஹம்மது கான் பாகவி

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா? +++++++++++++++ அ. முஹம்மது கான் பாகவி கரோனா பிடியில் இந்தியா சிக்கி மூன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *