பதிவுகள்
Home / அழைப்பியல் / நிறைபிறை – ஒரு முடிவுரையின் முன்னுரை
பிறை 30

நிறைபிறை – ஒரு முடிவுரையின் முன்னுரை

CLICK – இணைந்திருங்கள்
பிறை நிலாக் காலம் – நிறைபிறை
வி.எஸ்.முஹம்மது அமீன்
 
ஒரு முடிவுரையின் முன்னுரை
————————————————————–
இஸ்லாம் ஒரு மதமல்ல.. மார்க்கம்.!
மார்க்கம் என்றால் வழிமுறை,வழிகாட்டும் நெறிமுறை.வழிகாட்டி நெறிப்படுத்தியவன் இறைவன்.அவன் ஒருவனே.அவன் ஏகன்.தனித்தவன்.அவன் எத்தேவையுமற்றவன்.அவனுக்கு இணை துணை எதுவுமில்லை. அவன் யாரையும் பெறவுமில்லை.யாரலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு மரணமென்பது இல்லை.அவன் நித்திய ஜீவன். அவனுக்கு ஒப்பாரும், அவனை மிக்காரும் எவருமிலர்.
 
ஆற்றல்மிக்க இறைவனே இந்த உலகைப் படைத்தான்.வானங்கள், பூமி,சூரியன், சந்திரன், கோள்கள்,கடல்கள், மலைகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்ட யாவற்றையும் அவனே படைத்தான்.
இறைவன் தனது படைப்பில் மிகச் சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்தான்.மனிதனுக்கு உணவளிப்பவனும் அவனே! பாதுகாவலனும் அவனே,மரணிக்கச் செய்பவனும் அவனே, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புபவனும் அவனே, மனிதனின் நற்செயலுக்கு கூலியும் தீயசெயலுக்குத் தண்டனையும் வழங்குபவனும் அந்த ஓரிறைவனே
 
மனிதனைப் படைத்ததோடு விட்டுவிடாமல் அவனுக்கு வழிகாட்டும் வேதநூலையும் வாழ்ந்துகாட்ட தூதர்களையும் அனுப்பினான்.மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை,காலை கண்விழித்தது முதல் கண்மூடும் வரை, அடுப்பறையிலிருந்து ஆட்சிமன்றம் வரை ஒவ்வொன்றுக்கும் இஸ்லாம் துல்லியமான தீர்க்கமான வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது.
 
வழிகாட்டுதல்கள் யாவும் உபதேசங்களாக இல்லாமல் நடைமுறைப் படுத்திக்காட்ட வழிபாடுகளையும் இறைவன் அருளினான்.வழிபாடுகள் கடமையாக்கப்பட்டதன் மூலம் அன்றாடம் முஸ்லிம்களின் வாழ்வியலாகவும் அவை மாறிவிட்டன.இதனால் இஸ்லாம் அமைதிமிக்க இறையச்சமுள்ள தனிமனிதனையும்,ஒழுக்க விழுமங்கள் நிறைந்த குடும்பங்களையும், தூய்மையான சமூகத்தையும் உருவாக்கியது.
 
தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்னும் வழிபாடுகளின் வரிசையில் நோன்பின் நோக்கம், நோன்பின் நன்மைகள், நோன்பு ஏற்படுத்தும் மாற்றங்கள், நோன்பு தரும் பயிற்சி, உடல் நலனில் நலம் பயக்கும் தன்மைகள், சுய கட்டுப்பாடு, கற்பு நெறி பேணல், நேர ஒழுங்கு, கீழ்ப்படிதல்,வாரி வழங்குதல், நன்றி செலுத்துதல், மனித நேயம், சமத்துவம், பாவம்ன்னிப்புக் கோரி மீள்தல் ஆகியவற்றை இப் பிறைத் தொடரில் விரிவாய்க் கண்டோம்.
 
நோன்பு என்பது வெறும் பசித்திருக்கும் சடங்கு அல்ல. மகத்தான வாழ்வியல் புரட்சிக்கான அடித்தளப் பயிற்சி.இத்தகைய உயரிய பயிற்சியை வழங்கிய இறைவனைப் போற்றிப் புகழும் திருநாளே நோன்புப் பெருநாள். இறைவனை வணங்கி வழிபடவும், இல்லாருக்கு வழங்கி மகிழவும் வந்துதித்த ஈகைப் பெருநாளில் தினஇதழ் வாசகப் பெருமக்களுக்கு இதயத்தின் அடியாழத்திலிருந்து எழும் ஈகைப் பெருநாள் வாழ்த்துகள்.
 
எல்லாருக்கும் ஈத் முபாரக்!
( பிறை நிறைந்தது)

About idealvision

Check Also

பிறை 27

பிறை 27 – ஈரம் கனிந்த வீரம்

பிறை நிலாக் காலம் — பிறை 27 வி.எஸ்.முஹம்மது அமீன்   ஈரம் கனிந்த வீரம்   அதிகாலைத் துயிலெழுந்து, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *