பதிவுகள்
Home / அரசியல் / கதுவா சிறுமி ஆசிஃபா கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை-

கதுவா சிறுமி ஆசிஃபா கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை-

கதுவா சிறுமி கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை-
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்தாண்டு ஜனவரி மாதம் மாயமானார். பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
 
எதிர்க்கட்சிகள் கடும் குரல் எழுப்பிய நிலையில், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க அப்போதைய முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டார். திடீர் திருப்பமாக இவ்வழக்கை விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தீபக் ஹாஜுரியா கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக சிறப்பு புலனாய்வுக்குழுவால் கைது செய்யப்பட்டார். மேலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் உள்ளிட்ட 7 பேர் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர்.
 
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், வழக்கை மூடிமறைக்க முயன்ற உள்ளூர் காவலர்கள் என ஏழு பேரின் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜம்முவின் கத்துவா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வந்த மிரட்டல்கள் காரணமாக பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
 
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஊர் தலைவர் சஞ்சய் ராம், அவரது மகன், மற்றும் போலீஸ் அதிகாரி தீபக் ஹாஜூரியா உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சிறுவன் என்பதால், அவர் சிறார் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்.
 
மேலும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட 6 பேரில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சஞ்சய் ராம், தீபக் ஹாஜூரியா, பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற மூவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
பல்வேறு நெருக்கடிகள், எதிர்ப்புகளை கடந்து நீதியை வென்றெடுத்த வழக்கறிஞர் தீபிகா சிங் ராவத் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன

About idealvision

Check Also

கரோனாவுக்கு முக்கியமான மருந்தே பயப்படாமல் இருப்பதுதான் – விஷால்

கரோனாவுக்கு முக்கியமான மருந்தே பயப்படாமல் இருப்பதுதான் என்று விஷால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையைத் தாண்டி இப்போது பல்வேறு மாவட்டங்களில் கரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *