Saturday , September 19 2020
பதிவுகள்
Home / அழைப்பியல் / எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்
mursi

எகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்

எகிப்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்.
 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…
 
எகிப்தின் ஜனாதிபதி…முர்ஸி
 
1977 ஆம் ஆண்டு இக்வான் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட முர்ஸி பலதரபட்ட திறமைகளையும், இயக்க உறவுகளையும் வளர்த்துக்கொண்டார் .சியோனிச எதிர்ப்பியக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவரான முஹம்மத் முர்ஸி பல சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகளிலும் அங்கம் வகித்தார்
 
பொறியாளரும் அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றவருமான அல் ஹாஃபிழ் முஹம்மது முர்ஸி, திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்
 
2000 ஆம் ஆண்டு முதல் முறையாக பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார், இஹ்வான்களின் அரசியல் பிரிவில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புக்களைச் செய்துள்ள இவர் 2011 இல் இஹ்வான்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியான நீதிக்கும் சுதந்திரத்திற்குமான கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார் 2005,2010 ஆம் ஆண்டுகளில் சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பலர் போட்டியிட்டதில் டாக்டர் முஹம்மது முர்ஸி எகிப்தின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
mursi 3
அன்று டாக்டர் முர்ஸி தஹ்ரீர் சதுக்கத்தில் நிகழ்த்திய உரை எகிப்தியர்களின் உள்ளங்களை மட்டுமல்ல, இஸ்லாமிய உலகின் உள்ளங்களைத் தொட்டது.
 
எகிப்திய மக்கள் “இஃக்வானுல் முஸ்லிமீன்” இயக்க வெற்றியின் அறிவிப்பினை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் வண்ணம் கெய்ரோ நகரின் தஹ்ரீர் சதுக்கத்தில் பல மில்லியன் மக்கள் சஜ்தாவில் விழுந்து அல்லாஹுவுக்கு நன்றி செலுத்தும் அருமையான ஓர் நிகழ்வு.
இது உலக வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாகும் .ஸுஜூது செய்யக்கூடிய சமூகத்தை அல்லாஹ் ஒரு போதும் தோல்வியடைய செய்ய மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்கை நிறைவேற்றியே உள்ளான்.
 
“நான் குண்டு நுழையாமல் இருக்க எந்தக் கவசமும் அணிவதில்லை. மக்கள்தான் அதிகாரமுள்ளவர்கள், மக்களின் அதிகாரத்துக்கு அப்பால் எந்த அதிகாரமும் இல்லை, நான் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் அஞ்சுகிறவன் என்று துணிவாகச் சொல்லியுள்ளார்”
 
நாட்டின் சின்னமாக நாடே முன்னிலைப்படுத்தப்படவேண்டும், ஜனாதிபதியல்ல. ஏனென்றால் மக்கள் அழியக்கூடியவர்கள் நாடு நிலைத்திருக்கக்கூடியது ,
நாங்கள் எந்த நாட்டின் உள் விவகாரத்திலும் தலையிடமாட்டோம் அதேபோல எந்த நாடும் எங்களது உல் விவகாரத்தில் தலையிட அனுமதிக்கமாட்டோம்.
 
அவசரகால சட்டத்தை எந்த இடத்திலும் அமுல்படுத்த கூடாது, தனது சம்பளத்தை எகிப்து மக்களுக்காக வழங்கிடுவேன்
ஜனாதிபதியின் வாகன தொடரணி மூலம் பொது மக்களின் போக்குவரத்துக்கு தடையாக அமைய அனுமதிக்க மாட்டேன்,
அரசமாளிகையில் தொடர்ந்து இருக்க மாட்டேன் தனது வீட்டிலேயே இருப்பேன் என்றார்.
 
=================================
ஹாஃபிஸ் முஹம்மத் முர்ஸி எகிப்தின் வரலாற்றில் முதன் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எளிமையான மனிதர்.
 
கொடுங்கோன்மைக்கும் அநீதிதுக்கும் எதிரான குரலாக, நீதிக்கான முகமாக எழுந்த அடையாளம்
 
கடந்த 7 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் வதைக்கப்பட்ட போதும் கொள்கையின் குணக் குன்றாக நின்றவர், போராட்டமே அவரது வாழ்க்கை …
 
அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக!
 
 தகவல் – P.S.அப்துஸ்ஸலாம் 

About idealvision

Check Also

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா?

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா? அ. முஹம்மது கான் பாகவி

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா? +++++++++++++++ அ. முஹம்மது கான் பாகவி கரோனா பிடியில் இந்தியா சிக்கி மூன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *