பதிவுகள்
Home / அழைப்பியல் / முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்:
TV news

முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்:

முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்:

தொலைக்காட்சி சேனல்களில் அனல் பறக்க நடக்கின்ற விவாதம் தொடர்பாக ஏதேனும் சொல்லியே ஆக வேண்டும் என்று உங்கள் மனம் பரபரக்கின்றதா?

வாட்சப்பில் வந்தக் காணொளியை உடனே ஃபார்வர்டு செய்ய வேண்டும் என உங்களின் விரல்கள் துடிக்கின்றனவா?

நாட்டு நடப்பைக் குறித்து திட்டவட்டமான கருத்தொன்றை பகிர்ந்தே ஆக வேண்டும் என்றெல்லாம் உங்களுக்குத் தோன்றுகின்றதா?

நில்லுங்கள்.

எதனையும் செய்வதற்கு முன்பு சற்றே யோசியுங்கள். மற்றவர்கள் விதிக்கின்ற அஜெண்டாவில் வலிந்து போய் விழுந்து விடாதீர்கள்.

ஊடகத்தில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகளாய் – பத்திரிகையாளர் Kashif Ul- Huda காஷிஃபுல் ஹுதா பகிர்ந்துள்ள பத்து முத்தான யோசனைகளைக் கேளுங்கள்:

1. முஸ்லிம்களின் ஆக்கப்பூர்வமான சேவைகளையும் வரலாற்றுச் சாதனைகளையும் அதிகமாகப் பகிருங்கள். பண்பாடு, மொழி, பாரம்பர்யங்கள் போன்றவற்றில் முஸ்லிம்களிடம் காணப்படுகின்ற பன்மைத்தன்மையைக் கொண்டாடுங்கள்.

2. இந்து-முஸ்லிம் பிரச்னையாக விவாதங்கள் திசை மாறுவதைத் தவிர்த்து சட்டத்தின் ஆட்சி, சமூக நீதி, மனித உரிமை போன்றவற்றின் பக்கம் மக்களின் கவனத்தைத் திருப்புங்கள்.

3. வெறுப்பைப் பரப்புபவர்களை விட்டு விலகியே இருங்கள். வெறுப்பைக் கக்குகின்ற பதிவுகளையும் காணொளிகளையும் பகிர்ந்து அவற்றைப் பரப்பாதீர்கள். அவற்றுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிந்தால் செய்யுங்கள். அல்லது அவர்களைக் கடந்து சென்று விடுங்கள். அந்த வெறுப்பு வியாபாரிகளைக் கண்டிப்பதன் மூலமாக உங்களையும் அறியாமல் நீங்கள் அவர்களுக்கு விளம்பரத்தைக் கொடுத்து விடுகின்றீர்கள். அந்த வெறுப்புச் செய்தியும் பரவுகின்றது.

4. தொலைக்காட்சி செய்தி சேனல்களை அறவே பார்க்காதீர்கள். உசுப்பிவிடுகின்ற தலைப்புகளாய், பற்ற வைக்கின்ற வாசகங்களாய் உசுப்பிவிடுகின்ற நோக்கத்துடன் அவை ஒளிபரப்புகின்ற நொறுங்கு செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் ஒதுக்குங்கள். உங்களின் இந்த முடிவால் அவை மதிப்பிழந்து போகட்டும். அவர்களின் அந்த குருட்டு வணிக உத்தியால்தான் வெறுப்பைப் பரப்புபவர்களின் குரல் பரவுகின்றது.

5. சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுடன் சமூகம், சிந்தனைக்களம், என எல்லாக்களங்களிலும் உணர்வுபூர்வமான தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

6. சாதியின் பெயரால் நடக்கின்ற கொடுமைகள், பாகுபாடுகள், இந்தித் திணிப்பு, ஃபெடரலிசம் – கூட்டாட்சி சிந்தனை போன்றவற்றைக் குறித்து அதிகமாகப் பேசுங்கள். இவை இந்துத்துவ வெறியைத் தணிக்கின்ற ஆற்றல் படைத்தவை.

7. பொருளாதாரப் பிரச்னைகள், வேலைவாய்ப்பின்மை, பெண்கள் மீதான கொடுமைகள், சுற்றுச் சூழல், மருத்துவ வசதி போன்ற மக்களைப் பாதிக்கின்ற பிரச்னைகள் குறித்து அதிகமாகப் பேசுங்கள்.

8. ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் மீது நாட்டில் தொடர்ந்து நடந்து வருகின்ற கொடுமைகளை ஊடகத்தாருக்கு உரத்துச் சொல்லுங்கள்.

9. மனித உரிமை, சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றில் நம்பிக்கையும் பற்றும் உள்ள அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோரைச் சந்தித்து அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்ப அணி திரட்டுங்கள்.

10. மக்களுக்குச் சேவையாற்றுங்கள். உதவுங்கள். கை கொடுங்கள். பயனளிப்பவராய் மாறிவிடுங்கள்.

– பத்திரிகையாளர் காஷிஃபுல் ஹுதா பகிர்ந்துள்ள முத்தான யோசனைகள்.

About idealvision

Check Also

வைகோ

வரலாறு உங்களை மன்னிக்காது-நாடாளுமன்றத்தில் வைகோ

வரலாறு உங்களை மன்னிக்காது பாரதிய ஜனதா அரசு இன்று கொண்டுவந்துள்ள மசோதா, காஷ்மீர் மக்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டது. இங்கே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *