Wednesday , February 19 2020
பதிவுகள்
Home / செய்திகள் / குஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…! – இதுதான் இந்தியா
Gujarat

குஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…! – இதுதான் இந்தியா

அகமாதாபாத்தில் புதிதாக திறக்கவுள்ள தனது காலனி கடையை திறந்து வைக்க கவுரவ அழைப்பாளராக அன்ஸாரியை அழைத்துள்ளார் மோச்சி. இதுசமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற இந்து – முஸ்லிம் கலவரத்தின் போது இரண்டு பேரின் புகைப்படம் ஒட்டுமொத்த இந்தியாவை நடுங்கச் செய்தது. அந்த புகைப்படத்தில் ஒருவர் கைகளை கூப்பி மிரட்சி நிறைந்த கண்களில், ரத்தக் காயத்துடன் இருப்பார். அவர் பெயர் குத்புதீன் அன்ஸாரி.
 
மற்றொருவர் தலையில் காவி வண்ண ரிப்பன் அணிந்தும், இடதுகையில் வாளும் ஏந்தி முழக்கம் எழுப்பி ஆக்ரோஷமாக இருப்பார். அவர் அசோக் மோச்சி. கலவரத்தின் போது எதிரும் புதிருமாக இருந்த, இவர்கள் தற்போது நண்பர்களாகியுள்ளனர். 2014ம் ஆண்டு கேரளாவில் இடதுசாரிகள் நடத்திய நிகழ்ச்சியில் இருவரும் ஒரேமேடையில் கைகுலுக்கியது பெரும் வரவேற்பைப் பெற்றது.
 
அதனையடுத்து தற்போது, அகமாதாபாத்தில் புதிதாக திறக்கவுள்ள தனது காலணி கடையை திறந்துவைக்க கவுரவ அழைப்பாளராக அன்ஸாரியை அழைத்துள்ளார் மோச்சி. இது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
முன்னதாக டெல்லி தர்வாசா அருகே நடைபாதையில் 25 ஆண்டுகாளாக மோச்சி காலணிகளை தைக்கும் வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் மெட்ரோ கட்டுமான பணி நடைபெறுவதனால், அந்த இடத்தில் கடை வைத்து 150 ரூபாய் கூட சம்பாதிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார்.
 
அதனால் அவருக்கு கடை அமைத்துக் கொடுக்க நிதியுதவியை கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கியது. பின்னர் அந்த நிதியைக் கொண்டு, அகமாதாபாத்தில் ‘ஏக்தா சப்பல் கர்’ என, ஒற்றுமையை வெளிப்படுத்தும் பொருளில் பெயர் வைத்து கடையை திறந்துள்ளார் மோச்சு.
 
தற்போது அந்த கடை திறப்பு விழாவில் கவுரவ விருந்தினராக குதுபுதீன் அன்சாரியை அழைத்துள்ளார். குத்புதீன் அன்சாரி கலவரத்தின் பின்னர் மேற்கு வங்கத்தில் குடியேறினார். அவரது வீட்டிலேயே தையல்கடை அமைத்து பணியாற்றி வருகிறார். அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்திவருகிறார்.
 
இந்நிலையில் கடையை திறந்து வைத்து பேசிய அன்சாரி, ”நானும் அசோக்கும் அவ்வபோது சந்திக்கின்றோம். என்னுடைய குடும்பத்தில் ஒருவராகவே அசோக் உள்ளார். திடீரென ஒருநாள் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அசோக் தான் திறக்கவிருக்கும் புதிய கடையை நீதான் திறக்கவேண்டும் என கோரினார். நானும் ஒப்புக்கொண்டேன். அவர் சிறப்பாக வாழ்வில் முன்னேறுவதை பார்ப்பதை தவிர வேறு என்ன நான் விரும்பப் போகிறேன். நிச்சயம் அவர் நல்ல நிலைமைக்கு வருவார்.” என்று ஆனந்தத்துடன் தெரிவித்தார்.
 
உனாவில் தலித்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராகவும் சமூகத்தின் உரிமைகளுக்காக போராடுவதற்காகவும் 2017ம் ஆண்டு தலித் ஆசாதி என்ற இடதுசாரிகள் அமைப்பில் இணைந்தார் அசோக் மோச்சு.
 
கடை திறப்பு விழாவிற்கு பின் அசோக் மோச்சி கூறுகையில், “இந்து வர்ணாசிரம அமைப்புதான் என்னை செருப்பு தைக்கும் நிலைக்கு உள்ளாக்கியது. இந்து வர்ண அமைப்பு எங்களை முன்னேற அனுமதிக்காது. அதனால் நடக்கும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்று மோச்சி தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலின் போது கேரளாவில் சி.பி.ஐ (எம்) வேட்பாளர் பி.ஜெயராஜனுக்காக வட்டகர தொகுதியில் மோச்சி மற்றும் அன்சாரி ஆகியோர் பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– நன்றி – kalaignarseithigal. com

About idealvision

Check Also

kayal mahboob

2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி?

2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி? சமூக அக்கறையுடன் சமுதாயத் தலைவர்கள் கலந்தாய்வு ஜனவரி 15, 2019 செவ்வாய் காலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *