பதிவுகள்
Home / அரசியல் / தமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள் குரல் கொடுப்பார்களா…
தமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள்  குரல் கொடுப்பார்களா..
தமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள் குரல் கொடுப்பார்களா..

தமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள் குரல் கொடுப்பார்களா…

கேரளம் வழிகாட்டுகிறது
தமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள்
குரல் கொடுப்பார்களா…
கொளச்சல் அஜீம் 
 
கடந்த வாரம் கேரள சட்டப்பேரவையில் மந்திரி டாக்டர் கே.டி.ஜலீல் தாக்கல் செய்த ஒரு மசோதா ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆரோக்கியமான விவாதங்களுக்கு பிறகு ஒருமனதாக நிறைவேறியது..
 
“மதரஸா ஆசிரியர் சேமநலநிதி மசோதா” வை சபையில் தாக்கல் செய்த மந்திரி ஜலீல் பேசிய வார்த்தைகள் சபைக்குறிப்புகளில் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது..
 
மந்திரி ஜலீல் பேசுகையில்……
 
நான் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரபி மதரஸாவில் பயின்றவன்..
எனக்கு அலிஃப் முதல் கிதாப் கற்பித்து தந்த செய்தலவி முஸ்லியார், குர்ஆன் ஓதுவதற்கு பயிற்சி தந்த சைனுதீன் முஸ்லியார், ஹதீஸ் கலை மூலம் மார்க்கம் கற்பித்த உசைன் முஸ்லியார் உள்ளிட்ட நம்மை விட்டு பிரிந்து சென்ற பல்லாயிரம் உஸ்தாதுகளை நினைவு கூர்ந்து இந்த மசோதாவை சபையில் தாக்கல் செய்கிறேன்.
 
பொதுவாக வருமானத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் மதரஸா ஆசிரியர்களாக உள்ளனர். அதனாலேயே கஷ்டங்கள் துயரங்களை சுமந்து கொண்டு மதரஸா ஆசிரியர்கள் வலிகளை வெளிக்காட்டாமல் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்..
இந்த தேசத்தில் மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்கள் யாரென்று பார்த்தால் மதரஸா ஆசிரியர்கள் தான் முதலிடத்தில் தெரிவார்கள்..
 
காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை மதரஸா ஆசிரியர்கள் பணியென்றாலும் அதன் பின் வேறு வேலை செய்ய பெரும்பாலான ஊர்களில் சமூகம் அனுமதிப்பது கிடையாது..
கஷ்டப்படுபவர்களுக்கும், துயரம் அனுபவிப்பவர்களுக்கும் இயன்ற உதவிகளை செய்து வரம் கேரள அரசு மதரஸா ஆசிரியர்களுக்கு உதவிடும் வகையில் சேமநலநிதியத்தை உருவாக்கியுள்ளது..
 
1) மதரஸா ஆசிரியர் சேமநலநிதி திட்டத்தில் உறுப்பினர் ஆக குறைந்த பட்சம் 18 முதல் 60 வரை வயது வரம்பாக நிர்ணயிக்கப்படும்.
 
2) சேமநலநிதி அங்கமாகும் மதரஸா ஆசிரியர்கள் மாதம் ஐம்பது ரூபாய் கட்ட வேண்டும்..
வேலை செய்யும் மொத்த ஆசிரியர்களுக்காக மதரஸா நிர்வாகம் அல்லது ஆசிரியர்கள் தனியாக நேரடியாக கட்ட முடியும்.
 
3) ஐந்து வருடங்களுக்கு குறையாமல் சேமநலநிதி கட்டிய மதரஸா ஆசிரியர்கள் 60 வயது ஓய்வுக்கு பிறகு வேலை பார்த்த சர்வீஸ் காலம் பொறுத்து 1500 முதல் அதிகபட்சம் 7500 வரை மாதம் பென்ஷன் பெற முடியும்..
4) மருத்துவம், பல் மருத்துவம், சட்டப்படிப்பு, பி.டெக், பி.எட்.ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட மேற்படிப்புக்கு மெரிட்டில்தேர்வு பெறும் மதரஸா ஆசிரியர்கள் பிள்ளைகளின் கல்வி கட்டணம் முழுவதும் சேமநலநிதி யிலிருந்து வழங்கப்படும்..
 
5) சேமநலநிதி திட்டத்தில் உறுப்பினராகவுள்ள மதரஸா ஆசிரியர்கள் திருமணம் அல்லது அவர்கள் பிள்ளைகள் திருமணத்திற்கு 25000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்..
மேலும் தேவையை பொறுத்து கேரள சிறுபான்மை மேம்பாட்டு கழகத்தின் மூலம் இரண்டு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்கி ஐம்பது தவணையில் திருப்பி செலுத்த வழிவகை செய்யப்படும்…
 
6) மூன்று வருடம் தொடர்ந்து சேமநலநிதி தவணை செலுத்திய மதரஸா ஆசிரியர் உடல்நலம் பாதிக்கப்பட்டால் மாதம் ஆயிரம் ரூபாய் மருத்துவ உதவி வழங்கப்படும்..
7) திட்டத்தில் இணைந்த மதரஸா ஆசிரியர்கள் மரணமடைந்தால் ஜனாசா செலவுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும்..
 
கூடவே சர்வீஸ் காலத்தை கணக்கிட்டு குறைந்தபட்சம் 10000 முதல் அதிகபட்சம் 50000 ரூபாய் வரை குடும்பநலநிதி வழங்கப்படும்..
8)மதரஸா நிர்வாக பிரதிநிதிகள் மூன்று பேரும், மதரஸா ஆசிரியர் பிரதிநிதிகள் மூன்று பேரும், அரசு துறை அதிகாரிகள் மூன்று பேரும் அடங்கிய மதரஸா சேமநலநிதி வாரியம் துவங்கப்படும்..
 
அரசுத்துறை செயலாளர் அந்தஸ்துள்ள அதிகாரி கண்காணிப்பில் இயங்கும் மதரஸா சேமநல நிதியத்தின் தலைமை அலுவலகம் அமைக்க ரூபாய் 32 லட்சம் ஒதுக்கப்படுவதாகவும் மந்திரி ஜலீல் மசோதாவை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு இதன் மூலம் கேரளா முழுவதும் சுமார் 16000 மதரஸா ஆசிரியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்….
 
(தமிழக முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை முன்மாதிரியாக கொண்டு குறைந்தபட்சம் அமைச்சர் மூலம் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்)

கொளச்சல் அஜீம்

 
Colachel Azheem

About idealvision

Check Also

TV news

முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்:

முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்: தொலைக்காட்சி சேனல்களில் அனல் பறக்க நடக்கின்ற விவாதம் தொடர்பாக ஏதேனும் சொல்லியே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *