பதிவுகள்
Home / அரசியல் / குடியுரிமை திருத்த சட்டத்தால் மோசமான விளைவுகள் உண்டாகும்: பாஜகவுக்கு சிதம்பரம் எச்சரிக்கை
சிதம்பரம்

குடியுரிமை திருத்த சட்டத்தால் மோசமான விளைவுகள் உண்டாகும்: பாஜகவுக்கு சிதம்பரம் எச்சரிக்கை

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புதுகையில் திங்களன்று திமுக எம்எல்ஏ ரகுபதி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

குடியுரிமை மசோதா என்பது அரசியல் சாசனத்திற்கே முரணானது. மத்திய அரசு குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வரவேண்டும். எல்லா நாடுகளிலும் அகதிகள் சட்டம் என்பது இருக்கிறது.

அகதிகளாக யார் விண்ணப்பிக்கலாம்? அதில் யார் தகுதியானவர்கள்? யாரை அகதியாக ஒரு நாடு ஏற்றுக்கொள்ளும்? எவ்வித நிபந்தனைகளோடு ஒரு நாடு அகதிகளை ஏற்றுக் கொள்ளலாம்? எனப் பல விதிகள் பல மரபுகள் உள்ளதாகவும் தனது பேட்டியில் ப சிதம்பரம் குறிப்பிட்டார்.

அகதிகள் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து பார்க்காமல் அதற்கு பதிலாக சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தி ஒரு மதத்தினருக்கும் மற்றோர் மதத்தினருக்கும் இடையே பாகுபாடு செய்யக்கூடிய வகையில் குடியுரிமை சட்டம் என்ற தவறான சட்டத்தை மோடி அரசு கொண்டுவந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

தனக்கு இருக்கும் முரட்டு பெரும்பான்மையை வைத்து இந்தச் சட்டத்தை பாஜக அரசு இப்போது வேண்டுமானால் நிறைவேற்றி விடலாம் என்று நினைத்தால் அது தவறு. அதற்கான விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

About idealvision

Check Also

TV news

முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்:

முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்: தொலைக்காட்சி சேனல்களில் அனல் பறக்க நடக்கின்ற விவாதம் தொடர்பாக ஏதேனும் சொல்லியே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *