பதிவுகள்
Home / அழைப்பியல் / அல் குர்’ஆனில் மிக நுனுக்கமாக கூறப்படும் விரல் ரேகை
finger

அல் குர்’ஆனில் மிக நுனுக்கமாக கூறப்படும் விரல் ரேகை

அல் குர்’ஆனில் மிக நுனுக்கமாக கூறப்படும் விரல் ரேகை

விரல்_ரேகையைப் பற்றி நவீன அறிவியல் என்ன கூறுகிறது?

விரல் ரேகையானது குழந்தை கர்ப்பத்திலிருக்கும் நான்காம் மாதத்தில் உருவாகிவிடும்.பின்பு மனிதன் இறக்கும்வரை அதில் எந்த மாற்றமும் ஏற்ப்படுவதில்லை.இன்று உலகில் 600 கோடி மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றால்,இந்த கைவிரல் ரேகை ஒரு மனிதருக்கு உள்ளது போல் மற்றொரு மனிதருக்கு இருக்காது.ஒட்டு மொத்த மனிதர்களின் 6000 கோடி விரல்களும் ஒன்று போல் மற்றொன்று இருக்க வாய்ப்பில்லை. அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரத்தியேக,தனித்தனி அடையாளங்களை (Unique Identification Data) அமைத்துள்ளான்.

நமது தோற்றம் நாளுக்கு நாள் மாறக்கூடியது.பத்து வயதில் இருப்பது போல் இருபது வயதில் இருப்பதில்லை.நாற்பது வயதில், அறுபது வயதில் அல்லது என்பது வயதில் நமது உடல் உறுப்பு, முக அடையாளங்கள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இரண்டு வயது குழந்தையின் விரல் ரேகைதான், அந்தக் குழந்தை என்பது வயதான முதியவராக மாறிய போதும் அதே ரேகைதான் இருக்கும்.விரல் நுனி ரேகை அமைப்பு கொஞ்சம் கூட மாறுவதில்லை.எனவேதான் தடய அறிவியல் துறை விரல் ரேகை நிபுணர்கள், இதை “ கடவுள் கொடுத்த முத்திரை “ என்று ( A Seal given by God ) வர்ணிக்கிறார்கள். இது அல்லாஹ் அடியானுக்கு வைத்த முத்திரை.

தாயின் கர்ப்பத்தில் 10 வது வாரத்தில் வளரும் விரல்களில் 17 வது வாரத்திற்குள் விரல் ரேகைகள் பதியப்பட்டு முடிந்து விடும்.பிறகு அதன் ஆயுள் வரை மாறுவதில்லை.இதிலும் ஆச்சரியம்,ஒத்த உருவமுள்ள இரட்டைக் குழந்தைகள் விரல் ரேகைகளும் ஒன்றுபோல் இருப்பதில்லை.இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சியில் உருவான குளோனிங் முறையில் அச்சு அசலாக தாயைப்போல சேய் பிறந்தாலும் பிறக்கும் குழந்தையின் விரல் ரேகை ஒன்று போல் இருக்காது. காரணம் விரல் ரேகையை டிஎன்ஏ என்னும் மரபணு ஜீன்களால் உருவாவதில்லை. தாயின் கர்பத்தில்தான் ரேகைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: விந்துத்துளி தாயின் கருப்பையில் நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாட்கள் தங்கியிருந்த பின்னர் அந்த விந்துத்துளிக்குள் வானவர் ஒருவர் சென்று, ‘இறைவா! இவன் நற்பேறற்றவனா? அல்லது நற்பேறு பெற்றவனா? என்று கேட்கிறார்.பிறகு (இறைக்கட்டளைக்கேற்ப) அது குறித்து எழுதப்படுகிறது. அவனுடைய செயல்பாடு, இயக்கம், வாழ்நாள், வாழ்வாதாரம் ஆகியவையும் எழுதப்படுகின்றன. பிறகு ஏடுகள் சுருட்டப்பட்டு விடுகின்றன.பிறகு அதில் கூட்டப்படுவதுமில்லை; குறைக்கப்படுவதுமில்லை. அறிவிப்பவர்: ஹுதைபா பின் அசீத்(ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.5146.

பொதுவாக விரல் நுனி ரேகை மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்க்குத்தான் தடய அறிவியல் துறையினர் முதலில் இம்முறையைப் பயன்படுத்தினர் ஆனால் தற்கால கணினி அறிவியல் வளர்ச்சியின் காரணமாக பாஸ்போர்ட் மற்றும் அனைத்து அரசுத் துறை சேவைகளைப் பயன்படுத்த ஆதார் எனப்படும் தனித்துவ அடையாளத்திற்கு விரல் நுனி ரேகைகளே பெரிதும் பயன்படுகிறது தற்போது வெளிவரும் புதிய ஸ்மார்ட்போன்களை கையாள விரல்நுனி ரேகை அடையாளம் தேவைப்படுகிறது.

போலியான விரல் ரேகைகளை ஜெல்லடின் போன்ற பொருள்களால் உருவாக்கி அதை விரலில் அணிந்து கொண்டு ஏமாற்றும் நிகழ்வுகளும் நவீன தொழிற்நுட்ப உலகில் நடக்கத்தான் செய்கிறது அல்லாஹ் அமைத்த அடையாளத்தை மனிதனால் ஏமாற்ற முடியுமா? நிச்சயம் முடியாது ஏனெனில் விரல் நுனி ரேகைகள் கை விரலின் மேற்புறத்தில் பார்வைக்குத் தெரிந்தாலும் அதன் வேர் தோலின் அடிப்புரத்திலிருந்து வருவதாக அறிவியல் ஆய்வுகள் தற்போது கூறுகின்றன.

விரல் நுனியின் மேற்புற தோலிருந்து அரை மில்லி மீட்டர் (0 5 mm) ஆழத்தில் அசலான உள் ரேகைகள் (Internal Finger prints) பதிந்துள்ளன
பொதுவாக கை விரல் ரேகைகள் வயோதிகத்தினாலும் அல்லது கடினமான உடல் உழைப்பினாலும் தேய்ந்து தெளிவில்லாமல் போக வாய்ப்புள்ளது ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள் தோலின் அடியில் உள்ள அசலான ரேகைகளை இனம் கண்டு ஆட்களை அடையாளப்படுத்துகிறது மேலும் விரலின் மேற்தோலிருக்கு கீழே உள்ள ரேகையானது எல்லா மனிதர்களுக்கும் ஒரே ஆழத்தில் இருப்பதில்லை ஒவ்வொரு மனிதரின் அசல் ரேகை ஆழம் வேறுபடுகிறது இந்த ஆழ வித்தியாசத்தை 2 D காமிரா மூலம் அளந்து மனிதர்களை அடையாளம் காணலாம்.

இதல்லாமல் விரல் ரேகையில் உள்ள வியர்வை சுரப்பிகளில் இருந்து படியும் அமினோ அமிலங்களின் அளவை அளந்து சம்பந்தப்பட்ட நபர் ஆணா அல்லது பெண்ணா  என்பதையும் எந்த இணத்தை (Race) என்பதைக்கூட அறிய முடியும் காரணம் இந்த அமினோ அமிலங்கள் ஆணைவிட பெண்ணிற்கு இரு மடங்கு சுரக்கும்.
இனி வரும் காலங்களில் இந்திய அரசு சேவை துறை அனைத்திலும் ஆதார் எனப்படும் விரல் ரேகை அடையாள அட்டைகள் மூலமே இந்திய மக்களை அடையாளம் காணப்படும் இதற்க்காக இந்திய அரசு உலகிலேயே மிகப்பெரிதான அடையாள தரவு சேமிப்பு நிறுவனத்தை அமைத்துள்ளது.

அல்லாஹ்வின் ஆதார் அடையாளமானது இவ்வுலகில் வாழ்ந்த மனிதர்களுக்கும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் இனி இறுதி நாள் வரை வரப்போகின்ற மனிதர்களுக்கும் தனித்தனி பிரத்யேக அடையாளத்தை பதிந்து வைத்துள்ளான் அனைத்து மனிதர்களின் அமல்களும் அல்லாஹ்வின் ஆதார் அடையாளம் மூலம் பதியப்பட்டுள்ளது. இப்பதிவே சொர்க்க நரகத்தை தீர்மானிக்க உதவும் அல்லாஹ் ஞானமுள்ளவன்; பேரறிவாளன் வல்ல அல்லாஹ் நம்மை நரகத்தை விட்டும் பாதுகாப்பானாக!

“இது உங்கள் செயலைப்பற்றிய நம்முடைய பதிவுப்புத்தகம் இது உங்களைப்பற்றிய உண்மையையே கூறும் நிச்சயமாக நாம் நீங்கள் செய்தவற்றை எல்லாம் எழுதி வைத்திருக்கின்றோம் ” -அல் குர்ஆன் 45:29

About idealvision

Check Also

சாந்த் முஹம்மது

உம்மாவுக்கு மருந்து வாங்க பணமில்லை” – பிணம் எரிக்கும் பணியில் +2 மாணவர்!

உம்மாவுக்கு மருந்து வாங்க பணமில்லை” – பிணம் எரிக்கும் பணியில் +2 மாணவர்!   “வைரஸைக் கூட வென்றுவிடலாம். பசியை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *