பதிவுகள்
Home / Uncategorized / அஞ்சு விரல்களும் ஏழு வர்ணங்களும்

அஞ்சு விரல்களும் ஏழு வர்ணங்களும்

CLICK – இணைந்திருங்கள்

அஞ்சு விரல்களும் ஏழு வர்ணங்களும்

கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

▪︎நீங்க நெறைய வாக்குவாதங்கள டீவியில, மீடியாக்கள்ல, மேடைகள்ல பாத்துருப்பீங்க; கேட்டுருப்பீங்க.

ஆனா… இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த தாருஸ் ஸலாம் மேடையில உங்களுக்கு முன்னாடி ஒரு சுவாரஸ்யமான, சுவையான, கலகலப்பான வாக்குவாதம் நடக்கப் போவுது. அத நீங்க பாக்கப் போறீங்க; கேக்கப் போறீங்க!

‘என்ன வாக்குவாதம்?
யாரு பண்ணப் போறாங்க?
நடுவரு யாரு?’
என்று கேக்குறீங்களா?

நம்மள மாதிரி மனுசங்க பண்ணல!

என்ன மனுசங்க பண்ணலயா?
அப்போ யாரு பண்ணப் போறாங்க?
ஆடு மாடுகளா?

ஆடு மாடுகளும் இல்ல. மனுசங்களும் இல்ல. மனுசங்களோட கையில் உள்ள அஞ்சு விரல்களும் பண்ணப் போவுதுங்க.

என்னாது? விரல்கள் வாக்குவாதம் பண்ணப்போவுதுகளா?
நல்லா சுவாரஸ்யமா இருக்கே!
பண்ணட்டும், பண்ணட்டும்.
நல்லா ஜோரா பண்ணட்டும்.
வாங்க அந்த வாக்குவாதத்த நாமளும் கேப்போம்!

▪︎கட்டை விரல்

‘விரல்கள்ல நான்தான் ஒசத்தி. ஏன் தெரியுமா?

நான் இல்லாம எந்த ஒண்ணையும் நீங்க புடிக்கமுடியாது.

குறிப்பா நான் இல்லாம நீங்க பேனா பென்சில புடிச்சு சரியா எழுதவேமுடியாது.

யாருட்டயாவது நீங்க இப்புடி சேலஞ்ச் பண்ணுவதா இருந்தா கூட, என்ன காட்டித்தான் சேலஞ்ச் பண்ணுவீங்க.

‘ஆல்த பெஸ்ட்’ என்று சொல்லி நீங்க ஒருத்தருக்கொருத்தர் பெருமப்பட்டுக் கொள்றதும் என் மூலம்தான்.

கையைழுத்து போடத் தெரியாதவங்க கைநாட்டு வைக்க என்னத்தான் பயன்படுத்துவாங்க!

அட அதெல்லாம் விடுங்க!

நீங்க சின்ன புள்ளையா இருந்தப்ப கை சூப்புறதுக்குக் கூட என்னத்தான் இப்புடி பயன்படுத்துனீங்க!

உண்மையா இல்லையா? நீங்களே சொல்லுங்க!
அதனால நான்தான் ஒசத்தி, நான்தான் ஒசத்தி!

▪︎ ஆட்காட்டி விரல்

‘இல்ல, இல்ல. விரல்கள்ல நானே சிறந்தவன்.
ஏன் தெரியுமா?

யாரையாவது ஒருத்தர நீங்க சுட்டிக் காட்டுவதா இருந்தா, அந்தா போறான் பாருன்னு என்னத்தான் நீட்டி நீங்க சுட்டிக் காட்டுவீங்க.

இதுபோல யாரையும் அதற்றுறப்ப, ‘ஒழுங்கா போயிரு, இல்லன்னா ஒன்ன கொன்னு போட்டுருவேன்’னு என்னத்தான் நீங்க நீட்டி பயன்படுத்துவீங்க.

இன்னும் சொல்லப்போனா,

தொழுகையில, அத்தஹிய்யாத்து இருப்புல, ‘அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லா சொல்லும்போது எனனத்தான் தொழுகையாளிங்க நீட்டுவாங்க.
சிலரு ஸலாம் சொல்ற வரை நீட்டிக் கிட்டே இருப்பாங்க.
இன்னும் சில பேரு ஆட்டிக்கிட்டே இருப்பாங்க!
அட அதெல்லாம…
மூக்கு காது குடைய,
யாரையாவது வலிச்சம் காட்ட
என்னத்தான நீங்க அதிகம் பயன்படுத்துவீங்க!

▪︎ நடுவிரல்

‘நீங்க சொல்வது உண்மை இல்ல. விரல்கள்ல நான்தான் பெருமைக்குரியவன். ஏன் தெரியுமா?

விரல்கள்ல நானே நடு நாயகமா இருக்கேன்.

எல்லா விரல்கள விடவும் நானே உயரமாவும் ஒசத்தியாவும் இருக்குறேன்.

நான் இல்லாம நீங்க
கோழிக்குண்டு விளையாட முடியாது.

நான் இல்லாம் நீங்க
கேரம் போர்டு விளையாட முடியாது.

அந்த வகையில நீங்க ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்காவிட்டாலும் எனக்கே பெருமை உண்டு!’

▪︎ மோதிர விரல்

நீங்க பாட்டுக்கு உங்க அரும பெருமகளை சொல்றீங்களே! நான் ஒருத்தன் இருக்குறதயே நீங்க எல்லாரும் மறந்துட்டீங்க போல.

உங்க எல்லாத்தையும் விட நான்தாங்க சிறந்தவன்.
ஏன் தெரியுமா?

நீங்க என்னதான் உங்க அரும பெருமகளை அடுக்கினாலும் மனுசங்க மோதிரத்த இந்த விரல்லதான் அணிவாங்க. அதனாலதான் எனக்கு மோதிர விரல்னே பேரு வந்துச்சு.

கொட்டுப்பட்டாலும் மோதிர விரலால கொட்டுப் படணும்னு பெருமையா சொல்வாங்க! அந்த அளவுக்கு நான் சிறப்பான ஆளு. அத மொதல்ல புரிஞ்சிக்கங்க!’

ஆனா… ஒண்ணுங்க. கல்யாண சமயத்துல, அதுவும் நிக்காஹ் குத்பா ஓதுற சமயத்துல,

முத்தவல்லி, நாட்டாண்மை, நிர்வாகிக, ஜமாத்தாருக எல்லாரும் ஒக்காந்துருக்குற சபையில…

மாப்புள்ளை விரல்ல இஸ்லாத்துல தடை செய்யப் பட்டிருக்குற தங்க மோதிரத்த போடுறது பெரிய கொடுமைங்க. அத மட்டும் இங்க ஒக்காந்துருக்குற மாப்புள்ளமாருக யாரும் அனுமதிக்காதீங்க, ஆமா!

▪︎ சுண்டு விரல்

எல்லாரும் ஒங்க தரப்பு பெருமைகள எடுத்துச் சொல்லிட்டீங்க. ரொம்ப சந்தோசம், மகிழ்ச்சி.
இப்போ என்னோட பெருமைய நான் எடுத்துச் சொல்ல நான் வரல. ஆனா…எதார்த்தமான ஒரு உண்மைய உங்க அத்தனை பேருக்கும் நான் எடுத்துச் சொல்லப் போறேன்.

அது என்ன தெரியுமா?

என்னதான் நாம அத்தனைபேரும், ‘நான் ஒசத்தி நீ ஓசத்தி’ ன்னு பெருமப்பட்டுக் கொண்டாலும்
அதுக்காக வாக்குவாதம் செஞ்சாலும்…

நம்மள படச்ச இறைவன்ட்ட துஆ செய்றப்போ, நாம எல்லாரும் ஒண்ணா இணஞ்சு ஒருமனதோட கையேந்துறப்பதான் நம்ம துஆவ… பிரார்த்தனைய அவன் ஏத்துக்கொள்றான் என்பதை நாம அனைவருமே சுத்தமா மறந்து போனோம்.

‘யதுல்லாஹி அலல் ஜமாஆஹ்’

இறைவனோட உதவி ‘ஜமாஅத்’ என்ற கூட்டமைப்புல தான் உள்ளதுன்னு நபிகள் நாயகம் (ஸல்) அவுங்க இதத்தான் குறிப்பிடுவாங்க.

ஒருத்தர் அமெரிக்கரா இருக்கலாம், இன்னொருத்தர் ஆப்பிரிக்கரா இருக்கலாம். ஒருத்தர் அறபு நாட்டவரா இருக்கலாம், இன்னொருத்தர் பிற நாட்டவரா இருக்கலாம்.

யாரா இருந்தாலும் எல்லாரும் மனுசங்கதானே. எல்லாருமே ஆதம் ஹவ்வாவோட புள்ளைங்கதானே.
அப்புறம் ஏன் மனுசங்களுக்கிடையே பிளவுகளும் பேதங்களும் என்று யோசிப்போம்.

ஒருத்தர் வட இந்தியரா இருக்கலாம், இன்னொருத்தர் தென்னிந்தியரா இருக்கலாம். ஒருத்தர் தமிழரா இருக்கலாம், இன்னொருத்தர் மலையாளியா இருக்கலாம்.

யாரா இருந்தாலும் எல்லாரும் இந்திய மக்கதானே. அந்த இந்தியருக்குள் எதற்கு பிளவுகளும் பேதங்களும் என்று யோசிப்போம்.

இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவரோ, சீக்கியரோ
யாரா இருக்கட்டும். எல்லாரும் இறைவனோட படைப்புகதானே! பின் ஏன் இந்த சண்டைகளும் சச்சரவுகளும் என்று சிந்திப்போம்.

ஒருத்தர் சுன்னத் ஜமாஅத்தா இருக்கலாம், இன்னொருத்தர் தப்லீக் ஜமாஅத்தா இருக்கலாம். ஒருத்தர் தமுகாவா இருக்கலாம், இன்னொருத்தர் எஸ்டிபியா இருக்கலாம். ஒருத்தர் ஜமாஅத்தே இஸ்லாமியா இருக்கலாம், இன்னொருத்தர் முஸ்லிம் லீக்கா இருக்கலாம்.

யாரா இருந்தாலும் எல்லாரும் ஏக இறைவனான அல்லாவ நம்பிய, கலிமா சொன்ன முஸ்லிம்கதானே. நமக்குள்ள எதுக்கு பிளவுகளும் பேதங்களும்…?

மஞ்சள், சிவப்பு,
ஆரஞ்சு, பச்சை,
நீலம், கருநீலம்,
ஊதா என ஏழு வர்ணங்கள கொண்டதுதான் வானவில்.

அந்த இனிய வானவில் போல, ஒண்ணா இணஞ்சு எல்லாருக்கும் அழகா நாம காட்சி தருவோம்.

எல்லாம் வல்ல இறைவன் அப்படியான ஒத்துமைய, கட்டுக்கோப்ப நமக்கிடையே எப்போதும் வழங்கி அருள்புரிவானாக!

கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

About idealvision

Check Also

கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க

கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க..! நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான உணவுகள் குறித்து விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர்._ கொரோனா தொற்றால் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *