பதிவுகள்
Home / அரசியல் / பிரமாண்ட சுடுகாடு கட்டி சாதனைப் படைத்த ஒரு அரசாங்கம்!

பிரமாண்ட சுடுகாடு கட்டி சாதனைப் படைத்த ஒரு அரசாங்கம்!

பிரமாண்ட சுடுகாடு கட்டி சாதனைப் படைத்த ஒரு அரசாங்கம்!

ஒருபக்கம் பிராணவாயுக்காக பெருந்திரள் மக்களின் பிராணன் போய்க்கொண்டு இருக்கிறது,

இன்னொரு பக்கம் மருத்துவ சிகிச்சைகளுக்காக பிச்சைக்காரர்களைப்போல் மக்கள் யாசகம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பெருந்தொற்று தேசத்தின் நிலையை கைமீறி போகச்செய்திருக்கிறது.

• ஜலீல் பார்கர்களும்,

• கஃபீல்கான்களும்,

• ஷா நவாஸ் ஷேக்குகளும்,

• சமரசம் செய்து கொள்ளாத செவிலியர்களும்,

• முன்கள பணியாளர்களும் உயிரைத் துச்சமாக மதித்து மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆனால் மைய அரசோ சென்ட்ரல் விஸ்டா என்ற சொகுசு திட்டத்திற்காக 20,000 கோடியை தொடர்ந்து செலவிட்டுக்கொண்டிகிறது.

கோவிட் 19 பேரழிவுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பது போல் ஒருவர் டிவிட்டர்களிலும், விலைபோன ஊடகங்களிலும் வாய்ச்சவடால் விட்டு தாம் ஒரு பேரிடர்கால நிர்வாக அறிவற்ற மங்குனி என உலக நாடுகளிடம் நம்மை கூனிக்குறுகச் செய்துகொண்டிருக்கிறார்.

நாடி,நரம்புகளில் பொய் மட்டுமே ஊறிப்போன ஒரு பொய் இயந்திரம் நாட்டின் குடிமக்களுக்கு தேவையான அளவு தடுப்பூசி தயாரிப்பதற்கு பதிலாக ‘உலகின் தடுப்பூசி மையம்’ என்று காட்டிக்கொள்வதில் மும்முரமாக இருக்கிறது.

கோவிட் 19 இன் முதல் அலையின் போது, இஸ்ரேலுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டு, நம் தேசத்தின் கோவிட் போர்வீரர்களின் தேவையை கருத்தில் கொள்ளாமல், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிபிஇக்களை ஏற்றுமதி செய்தது. இப்படி செயல்பட்ட இந்த மரண வியாபார அரசுதான் இப்போது பெருந்தொற்றின் இரண்டாவது அலைகளில், கார்ப்பரேட் தடுப்பூசி வணிகத்தை நடத்தி தம் இயலாமையை மறைக்க மாநில அரசுகளை குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறது.

இதை சுட்டிக்காட்ட வேண்டிய ஊடகங்களோ, பிரிவினையின் போது இதுதான் எம் தேசம், இவர்கள்தான் எம் உறவுகள் என மாமன்களாகவும், மச்சான்களாகவும், பங்காளிகளாகவும் உறவாடி மகிழ்ந்த ஒரு சமூகத்தை தப்லிக், தப்லிக் என விரட்டி, விரட்டி மகிழ்ந்தன. தேர்தல் திருவிழாக்க ளுக்குள்ளும், மேளாவின் கோவணங்களுக்குள்ளும் ஓடி ஒளிந்து ஊடக அறத்தை நிலைநாட்டிக்கொண்டன.

முதல் அலையின்போது பத்து நாட்களில் உலகமே வியக்க பிரம்மாண்ட மருத்துவமணை கட்டியது சீனா.

ஒரே வாரத்தில் ஒரு லட்சம் படுக்கைகள் தயார் செய்தது ஜெர்மனி.

குறுகியகாலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட துரித மருத்துவமனைகளை கட்டியது ரஷ்யா.

ஆனால் நம்நாட்டில் ஒரே நாளில் பிரம்மாண்டமான சுடுகாடு கட்டியது மோடி அரசு தலைநகர் டெல்லியில்!!

கொரோனா என்ற அரக்கனிடமிருந்து உலக நாடுகள் பாடம் கற்றுக்கொண்டபிறகு அறிவியல் பார்வைகளையும், பொருளாதார கோணங்களையும் மாற்றிக்கொண்டு முன்னேறிச்செல்ல முயற்சித்து கொண்டிருக்கின்றன.

ஆனால், மோடி அரசோ, அறிவியல் பார்வைகளையும், அது தரும் மகத்தான மருத்துவ கட்டுமானங்களையும், பராமரிப்புகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு தேசபக்தி, தேசவிரோதி, மதவெறுப்பு என ஊடகங்களில் தம் மக்களை மூளைச்சலவை செய்துகொண்டிக்கிறது!!

இதுவரை வந்த எந்த தலைவர்களும் மோடியைப் போன்று நூறு வருடங்கள் தேசத்தை பின்னோக்கி கொண்டு சென்று தோல்வியடைய செய்ததில்லை.

இவர் செய்து கொண்டிருப்பது கொரோனாவுக்கு எதிரான முன்னெடுப்பு அல்ல,

தேசத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் அழித்தொழிப்பு!!!

”””””””””””””””””””’
நன்றி: Bhaskarraja Rengarajan

About idealvision

Check Also

கரோனாவுக்கு முக்கியமான மருந்தே பயப்படாமல் இருப்பதுதான் – விஷால்

கரோனாவுக்கு முக்கியமான மருந்தே பயப்படாமல் இருப்பதுதான் என்று விஷால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையைத் தாண்டி இப்போது பல்வேறு மாவட்டங்களில் கரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *