பதிவுகள்
Home / தெரிந்து கொள்வோம் / தற்கொலைகளை தடுப்பது எப்படி? மனநல மருத்துவர் விளக்கம்
மனநலம்

தற்கொலைகளை தடுப்பது எப்படி? மனநல மருத்துவர் விளக்கம்

மனநலம்தற்கொலைகள்

தற்கொலை சம்பவங்கள் மனஅழுத்தத்தால் தான் ஏற்படுகிறது. இதை தடுப்பது எப்படி? என்பது குறித்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி மனநல மருத்துவர் ராஜசேகர் கூறியதாவது:–

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை சரிசெய்து கொள்ள முடியாமலும், மற்றவர்களிடம் அதை வெளிப்படையாக பேச முடியாமலும் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவ– மாணவி களை எடுத்து கொண்டால் நாம் தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தி லும், தேர்வில் தோல்வி அடைந்த பிறகு தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்ற னர்.

இதை தவிர அதிக கவலை, உணர்ச்சி வசப்படுதல், மன சோர்வு, நோய்வாய் படுதல், போதை பழக்கத்திற்கு ஆளா குதல், யாரிடமும் பேசாமல் தனியாக இருத்தல் போன்ற பல்வேறு காரணங்கள் உள் ளன. கோவை, பொள்ளாச் சியில் பெரும்பாலும் சாணி புவுடர் (விஷம்) குடித்து தான் அதிகளவு தற்கொலை சம் வங்கள் நடைபெறுகின்றன.

பள்ளி மாணவர்கள்

குழந்தைகளை பற்றிய புரி தல் பெற்றோர்களுக்கு வேண் டும். எனென்றால் குழந்தைகள் தங்களது அப்பா, அம்மாவின் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

குழந்தைகளின் தற்கொலைக்கு பெற்றோர்களுக்கு பங்கு இருப்பது போன்று, ஆசிரியர்களுக்கு அதில் முக்கிய பங்கு உள்ளது. பள்ளியில் எந்தந்த மாணவர்கள் மன சோர்வுடன் காணப்படுகிறார்கள். யாரிடம் பேசாமல் தனியாக எதை பற்றியோ சிந்தித்து கொண்டு இருப்பவர்கள் இருந்தால், அவர்களை கண் டறிந்து தகுந்த மன நல ஆலோ சனை களை வழங்க வேண் டும்.

தகுந்த ஆலோசனை பெற வேண்டும்

மன அழுத்தத்தில் இருந்து விடுபட மனநல மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை களை பெற்று மறுவாழ்வு பெற வேண்டும். இதுதொடர்பாக போதிய அளவு விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. தூக்கமின்மை மிகப்பெரிய நோய். எனவே தூக்கமின்மை பிரச்சினை இருந்தால் உடனே மருத்துவரை பார்த்து உரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.

ஒருவர் யோகா, தியானம் போன்றவற்றில் இருந்தும் மனஅமைதி பெறலாம். அப்படியும் மனஉளைச்சல் மற்றும் சோர்வாக இருந்தால் உடனே மனநல மருத்துவரை பார்த்து உரிய ஆலோசனை பெற்று கொள்ளுங்கள். மேலும் எந்திரத்தனமான இந்த கால வாழ்க்கையில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வீட்டில் உள்ள அனைவரும் அவர்களது அன்றாட வாழ்க்கை பற்றி கலந்துரையாடல் அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

About idealvision

Check Also

tik-tok_

டிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே! உங்கள் கையில்தான் உள்ளது

அ. முஹம்மது கான் பாகவி பெற்றோர்களே! இன்றைக்குப் பணம் சம்பாதித்துவிடலாம்! வசதியான வாழ்க்கைக்கு வழிவகுத்துவிடலாம்! பிள்ளைகளைச் செல்லமாகச் செல்வச் செருக்கோடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *