பதிவுகள்

இது பள்ளிவாசலுக்கான காணிக்கை! – சிராஜுல்ஹஸன்

வழிபாட்டுத் தலங்களுக்குப் போகும்போது பூ, பழம், தேங்காய் எல்லாம் கொண்டு போவார்கள் அல்லவா? குறைந்தது தீபாராதனை காட்ட கற்பூரமாவது எடுத்துச் செல்வார்கள். விரும்பினால் தட்டில், உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள். பள்ளிவாசலில் இதுபோல் ஏதேனும் ‘காணிக்கை செலுத்துதல்’ உண்டா? உண்டு. என்ன அந்தக் காணிக்கை?  முதலில், பள்ளியினுள் நுழையும்போது ஓத வேண்டிய ஓர் அழகான, சிறிய பிரார்த்தனையை இறைத்தூதர் அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.“இறைவா..! உன் அருளின் வாசலை எனக்குத் திறப்பாயாக” என்று பிரார்த்தனை …

மேலும் .....

தஸ்கியா (உளத்தூய்மை) என்றால் என்ன?

  ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி    [ தீமையைவிட்டுத் தூரவிலகி இருப்பவரே – தூய்மை’யைப்பெற்றுக் கொள்ள முடியும்! ஆதலால், ‘தஸ்கியா’ அடைவதற்கான மூலகாரணமாக இறையச்சமே அதாவது ‘தக்வா’வே உள்ளது. ‘தக்வா’வைப் பெற்றவர்தாம் ‘தஸ்கியா’ வைப்பெற்றுக்கொள்ள முடியும். தஸ்கியா’வின் செயல்வடிவ வெளிப்பாடாக உள்ளது தொழுகை ஆகும். ஈமான் பில்லாஹ் என்பதன் முதல் வெளிப்பாடே தொழுகைதான்! ஷரீ அத்தின் துவக்கப் புள்ளியாகவும், ஷரீஅத்தைச் சூழ்ந்து வரையறையாகவும் தொழுகையாகவும் தொழுகையே உள்ளது.] ‘தஸ்கியத்துந் நப்ஸ்’ …

மேலும் .....

சர்தார் பட்டேல் சிலை, உண்மையில் இந்தியர்களான நமக்கு பெருமிதமான விஷயமா?

உலகின் உயரமான சிலையான சர்தார் பட்டேல் ஒற்றுமை சிலை இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது. தங்களது பெருமிதத்தை வெளிப்படுத்தி கொள்ள ஒரு அடையாளம் கிடைத்துள்ளதாக இந்தியர்கள் நினைக்கிறார்கள். நிகில் ராம்பல் உலகின் உயரமான சிலையான சர்தார் பட்டேல் ஒற்றுமை சிலை இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது. தங்களது பெருமிதத்தை வெளிப்படுத்தி கொள்ள ஒரு அடையாளம் கிடைத்துள்ளதாக இந்தியர்கள் நினைக்கிறார்கள். இந்த சிலையினால் இந்தியாவிற்கு பெருமையும் லட்சக்கணக்கான வெளிநாட்டு …

மேலும் .....

42 பேரை சுட்டுக்கொன்ற வழக்கு : ஓய்வு பெற்ற 16 போலீசாருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

42 பேரை சுட்டுக் கொன்ற வழக்கு ஓய்வு பெற்ற 16 போலீசாருக்கு ஆயுள் சிறைத்தண்டனை. கீழ் கோர்ட்டின் விடுதலை தீர்ப்பை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. 42 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில், ஓய்வுபெற்ற போலீசார் 16 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. உத்தரபிரதேச மாநிலம், மீரட் பகுதியில் 1987–ம் ஆண்டு இரு பிரிவினர் இடையே வகுப்பு கலவரம் நடந்தது. அப்போது …

மேலும் .....

2019 நாடாளுமன்றத் தேர்தல்: இந்திய முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள்!

கட்டுரையாளர் : ராபியா குமாரன், எழுத்தாளர் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 16-05-2014 அன்று இரவு இணையதளத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். ஒரு தமிழ் நாளிதழின் இணையதளத்தில் நரேந்திர மோடியின் வெற்றிச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியின் கீழ் ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள். அத்தனையும் நரேந்திர மோடியை இந்திய தேசத்தைக் காக்கவும், முன்னேற்றவும் வந்த அவதாரம் என்ற நிலைக்கு தூக்கிப் பிடித்த பின்னூட்டங்கள். குஜராத் போன்று இந்தியாவும் இனி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும், …

மேலும் .....

Metoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி

பாலியல் குற்றவாளிகளை அடையாளம் கண்டு,தண்டனை வழங்கி, குற்றங்களைக் களைவதற்கு வழிவகை செய்யும் ஆக்கபூர்வமான குற்றவியல் சட்டங்கள் அநேகமான நாடுகளில் இல்லை.இருவரின் சம்மதுத்துடன் நடக்கும் பாலியல் அத்துமீறல் குற்றமாகவே கருதப்படுவதில்லை.பலவந்தமாக நடக்கும் பாலியல் உறவுகள் மட்டுமே குற்றம் என்கிறது பல நாடுகளின் சட்டம். பாலியல் பலுத்காரத்திற்கு வழங்கப்படும் தண்டனையாவது அர்த்தமுள்ளதாக இருக்கிறதா என்றால்,அதுவும் இல்லை.இக்குற்றத்தைப் புரியும் ஆண்கள் வெகுசுலபமாகத் தப்பித்துக்கொள்வதும் பெண்கள் மெளனமாகி ,மானத்திற்குப் பயந்து ஊமையாகிவிடுவதும் பழக்கமாகி விட்டன. பாலியல் …

மேலும் .....

தடைகளைக் கண்டு தயங்காதீர்கள்..! – சிராஜுல்ஹஸன்

சிலர் எப்போது பார்த்தாலும் ‘நம்மிடம் தகுதி இல்லையே, திறமை இல்லையே, செயல்பட முடியவில்லையே’ என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். இருக்கிற வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து யோசிக்கவே மாட்டார்கள். மறைந்த மார்க்க அறிஞர் எம்.ஏ. ஜமீல் அகமது அவர்கள் தம்முடைய “அழைப்புப் பணி” எனும் நூலில் இப்படிப் பட்டவர்களைக் குறித்து அழகாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “நம்மிடம் ஆற்றல்கள் இல்லையே, தகுதிகள் குறைவாக இருக்கின்றனவே என்று நினைத்து கைகட்டிக்கொண்டு உட்கார்ந்து இருந்தால் …

மேலும் .....

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்! 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, …

மேலும் .....

வீடுகளை விபசார விடுதிகளாக்காதீர்கள் –

திரு சாலமன் பாப்பையா அவர்களின் பதிவு… //தன் மனைவிக்குப் பக்கத்து வீட்டுக்காரனைப் பிடித்திருக்கிறது என்றால் அவனோடு படுத்துச் சுகம் அனுபவித்துவிட்டுவா..// 20 வயது தொட்ட பிறகும்கூட காதலைப் பற்றிய தெளிவு இல்லாமல் காமச் சகதியில் வழுக்கி விழுந்துகொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு, விழிப்புணர்வு தர யோக்கியதை இல்லை. ஆனால், வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் யாரோடும் பாலுறவில் ஈடுபடலாம் என்று தீர்ப்பளிக்க முடிகிறது. இந்தத் தீர்ப்பு அவர்கள் ஒழுக்கம் கெட்டு அலையவும் …

மேலும் .....

குழந்தைகளுக்கு நேரும் கொடூரம் -காக்கத் தவறுகிறோமா நாம்?

எனக்கு ஏழு வயது இருக்கும்போது, எனது தங்கையையும் அழைத்துக்கொண்டு ஏறத்தாழ மூன்று கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு அன்றாடம் நடந்தே செல்வேன். கிராமப்புறங்களில் பால்யம் கழிந்த நமது அப்பாக்களின், தாத்தாக்களின் தலைமுறையிலோ, அன்றாடம் சர்வசாதாரணமாகப் பல கிலோ மீட்டர் தூரங்களைக் கடந்து சின்னஞ்சிறு சிறுவர்களும், சிறுமிகளும் தனியாகப் பயணித்துவருவார்கள். இப்போதெல்லாம் ஒரு சிறுமியையோ, சிறுவனையோ சாலையில், தெருக்களில் தனித்துக் காண நேர்ந்தால் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. குழந்தைகள் இன்றைக்கு எத்தனை பெரிய …

மேலும் .....