பதிவுகள்

கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க

கொரோனாவை எதிர்க்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க..! நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான உணவுகள் குறித்து விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர்._ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் என்றால், கொரோனா வந்துபோனதே தெரியாமல் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியால் மீண்டவர்கள் பலர். இதுகுறித்து ஊட்டச்சத்து ஆலோசகர் மீனாட்சி பஜாஜ் பேசுகையில், ஒருமுறை கொரோனா வந்தவர்களுக்கு மறுபடியும் வராது என்கிறது ஓர் ஆராய்ச்சி, இல்லையில்லை, வருவதற்கு வாய்ப்பிருக்கிறது’ என்கிறது இன்னோர் ஆராய்ச்சி. ஒருமுறை கொரோனா வந்ததால் …

மேலும் .....

கொரோனா மட்டும்தான் கொல்கிறதா? – மரு.ஸ்ரீராம்

கொரோனா மட்டும்தான் கொல்கிறதா? கொரொனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பொது முடக்கத்தின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தினம் தினம் சிரமங்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஒரு பக்கம் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது; வேலையின் நிரந்தரத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது; விலைவாசி கணிசமாக உயர்ந்துள்ளது; பணப்புழக்கம் மிகவும் குறைந்துள்ளது; மருத்துவ செலவுகளை சமாளிக்க மக்கள் கடனாளி ஆகும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது; செய்துவந்த வியாபாரம் முற்றிலும் முடங்கிப் போய் …

மேலும் .....

குரலற்றவர்களின் குரலாகவே இருக்க விரும்புகிறேன். நெறியாளர் செந்தில் வேல்

திருநெல்வேலியில் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சார்ந்தவன்தான் நான். ஒருவேளை உணவிற்கு எனது குடும்பமே கஷ்டப்பட்டது. 12ம் வகுப்பு முடித்த பிறகு படிப்பை நிறுத்திவிட்டு கூலி தொழிலுக்கு சென்றுவிட்டேன். மரம் வெட்டியுள்ளேன், பழ வியாபாரம் செய்துள்ளேன். ஒருமுறை 3 மாதங்கள் உழைத்து 2 மாத சம்பளத்தை வீட்டிற்கு கொடுத்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டு இங்கு வந்தது வரை என் வாழ்க்கை முழுக்க கஷ்டம், துன்பம், கவலை மட்டுமேதான். கடுமையாக போராடி என் …

மேலும் .....

வைரஸ் இல்லாத தேசம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

வைரஸ் இல்லாத தேசம்! உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இயற்கை இயற்கையல்ல என்று நான் கூறுகிறேன். காரணம், அதிலே கச்சிதம் கச்சிதமாக உட்கார்ந்திருக்கிறது. கச்சிதம் எங்கிருக்கிறதோ அங்கு ஓர் ஏற்பாடு இருக்கிறது என்பது அர்த்தம். ஏற்பாடு எங்கிருக்கிறதோ அங்கு ஏற்பாட்டாளன் ஒருவன் இருக்கிறான் என்பது திண்ணம். ஓர் ஏற்பாட்டாளனினூடாக நடைபெறுகின்ற ஒன்று இயற்கையாக இருக்க முடியாது. இந்தக் கூற்றை ஏற்க முடியுமா, முடியாதா? என்பதை விரும்பியவர்கள் தங்களது நுண்ணறிவோடு ஒரு …

மேலும் .....

கொஞ்சம் சில நொடிகள் அந்த தருணம் தப்பியிருந்தால்

தனது மனைவி குழந்தையுடன் முதல் பயணம் மேற்கொண்ட ஒவ்வொருவரும் இதுபோன்ற ஒரு செல்பி எடுத்திருப்பார்கள். அதுபோன்ற ஒரு செல்பிதான் துபாயிலிருந்து விமானம் கோழிக்கோடு கிளம்பும்போதும், பிலாச்சேரி ஷர்புதீன் எடுத்திருக்கிறான். இந்த புகைப்படம் பார்க்கும்போது நீங்கள் ஒரு நிமிடம் திகைத்திருக்கக் கூடும். உங்களை நீங்கள் அந்த இடத்தில் கொஞ்சம் நினைத்துப் பார்த்துருக்கக் கூடும். இன்று இறங்கப்போவதில்லை இறக்கப்போகிறோம் என்று, ஷர்புதீனுக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ஒரு மன அலசல் நிகழ்ந்திருக்கின்றது. …

மேலும் .....

கரோனாவுக்கு முக்கியமான மருந்தே பயப்படாமல் இருப்பதுதான் – விஷால்

கரோனாவுக்கு முக்கியமான மருந்தே பயப்படாமல் இருப்பதுதான் என்று விஷால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னையைத் தாண்டி இப்போது பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. நேற்று (ஜூலை 25) மாலை விஷாலுக்கும், அவருடைய தந்தை ஜி.கே.ரெட்டிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. 20 நாட்களுக்கு முன்பே உறுதி …

மேலும் .....

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: என்ன செய்யப் போகிறோம்? பேராசிரியர் அ.மார்க்ஸ்

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: என்ன செய்யப் போகிறோம்? *** இன்று பணிநீக்கப்பட்டுள்ள நண்பர் ஹாஃபிஸ் “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்” என்கிற அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர். கடந்த ஆண்டுகளில் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை முன்னெடுத்த ஒரு முக்கிய அமைப்பாக அது விளங்கியது. இன்று அவர் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார் என்றால் கடந்த காலத்தில் இந்த அமைப்பின் ஊடாக அவரும் இதர ஊடக நண்பர்களும், எஸ்.வி.சேகர் பெண் ஊடகவியலாளர்களை இழிவு படுத்தியது உட்பட ஊடகவியலாளர்களின் பல …

மேலும் .....

புன்னகை தவழ பேசுங்கள்…! – -சிராஜுல்ஹஸன்

 புன்னகை தவழ பேசுங்கள்…! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தலைவனுக்கும் தொண்டனுக்கும் அல்லது மேலதிகாரிக்கும் ஊழியர்களுக்கும் இடையில் தொடர்பு எப்படி இருக்க வேண்டும், ஊழியர்களிடம் எப்படிப் பேச வேண்டும், தொண்டர்களிடம் தலைவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து இன்றைக்குப் பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சும்மா அல்ல, ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்துக்கொண்டுதான் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகளில் இரண்டு முதன் மையான விஷயங்கள் வலியுறுத்தப்படுகின்றன. எப்போதும் புன்னகை தவழும் …

மேலும் .....

கொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்

கொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்…! சமுதாயச் சொந்தங்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஷரீஅத் கவுன்சிலின் பரிந்துரைகள். இதோ, இன்னும் சில நாள்களில் ஈதுல் அத்ஹா எனும் தியாகத் திருநாள் நம்மை வந்தடையவிருக்கின்றது. அந்த நன்னாள்களில் நாம் மேற்கொள்கின்ற முக்கியமான வழிபாடுதான் குர்பானி. கொரோனா நாளுக்கு நாள் உக்கிரமாகிக் கொண்டிருக்கின்ற சூழல், அரசாங்கம் விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக பெருநாள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த நிலைமையில் ஈதுல் அத்ஹா, …

மேலும் .....

நெருக்கடி நிலை காலத்தில் உம்மாவும் வாப்பாவும் – P.S.அப்துஸ்ஸலாம்

  1975 நெருக்கடி நிலை ஒடுக்குமுறைகள் 45 ஆம் ஆண்டு நினைவு நாள்   ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தடை செய்யப்பட்ட நாள். ஜூன் 25 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது.   நெருக்கடி நிலை இந்திரா காந்தியின் நலனைக் காக்கவும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் கொண்டுவரப்பட்டது. தனி மனித உரிமைகள் தகர்த்தெறிய பட்டன. குடிமக்கள் அனுதினமும் அல்லல் …

மேலும் .....