பதிவுகள்

கர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது!❗️

கர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது!❗️ 10 ஆண்டுகளில் 39 பேர் திஹார் சிறையில் பிரசவித்துள்ளனர்!❗️டெல்லி உயர் நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல்!

மேலும் .....

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா? அ. முஹம்மது கான் பாகவி

மார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா? +++++++++++++++ அ. முஹம்மது கான் பாகவி கரோனா பிடியில் இந்தியா சிக்கி மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆயிரக்கணக்கானோரின் இன்னுயிரைப் பலிகொண்டுவிட்டது. பொருளாதாரத்தில் கோடிக்கணக்கான டாலர்களை விழுங்கிவிட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண்மை, வணிகம், உற்பத்தி, ஏற்றுமதி… என எல்லாத் துறைகளையும் நலிவடையச் செய்துவிட்டது. ஆன்மிகத்தையும் அது விட்டுவைக்கவில்லை. ஆம்! வழிபாட்டுத் தலங்கள் பல மாதங்களாக மூடிக் கிடக்கின்றன. அங்கே தொழுகை, தியானம், திருமறை ஓதல், …

மேலும் .....

“எங்களுக்கு அப்பாதான் எல்லாமே!” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்!

“எங்களுக்கு அப்பாதான் எல்லாமே!” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்!   குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை அணுகியவர், குஜராத் காவல்துறை அதிகாரியான சஞ்சீவ் பட் ஐ.பி.எஸ். அவரைப் பழிவாங்கும் நோக்கில் அவர் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் தள்ளியது, மோடியின் பாசிச அரசு.   சர்வதேச தந்தையர் தினமான இன்று, அவரது குழந்தைகள் ஆகாஷி மற்றும், சாந்தனு …

மேலும் .....

உம்மாவுக்கு மருந்து வாங்க பணமில்லை” – பிணம் எரிக்கும் பணியில் +2 மாணவர்!

உம்மாவுக்கு மருந்து வாங்க பணமில்லை” – பிணம் எரிக்கும் பணியில் +2 மாணவர்!   “வைரஸைக் கூட வென்றுவிடலாம். பசியை வெல்வதுதான் பெரிய போராட்டமாக இருக்கிறது” அருகிலுள்ள தகனமேடையில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைவிடச் சுடுகிறது, சாந்த் முஹம்மதுவின் வார்த்தைகள்!   உம்மாவுக்கு மருந்து வாங்க வேண்டும்; தங்கைகளைப் படிக்க வைக்க வேண்டும்; வீட்டில் உள்ளவர்களின் பசியைப் போக்க வேண்டும்; இது எல்லாம் நிறைவேற, உலகிலேயே மிகவும் ஆபத்தான வேலையில் ஈடுபட்டிருக்கிறார், …

மேலும் .....

பேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு கொரோனா பாடம்!

பேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு_கொரோனா_பாடம்! உஸ்தாத்_ரஷீத்_ஹஜ்ஜுல்_அக்பர பூமிப் பந்தின் மீது வாழ்கின்ற ஜீவராசிகளின் இயக்கம் ஒரு பேரியக்கமாகும். அந்த ஜீவராசிகளுள் மனித இனத்தின் இயக்கமானது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல்பரிமாணங்களைக் கொண்ட மற்றுமொரு பேரியக்கமாகும். தற்போது அந்தப் பேரியக்கத்தின் குறுக்கே ஒரு பெரும் தடை விழுந்திருக்கிறது. அந்தத் தடையைப் போட்டது யாருமல்ல, கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய வைரஸ் கொரோனா! நாடுகள் செயலிழந்திருக்கின்றன; நகரங்கள் வெறிச்சோடியிருக்கின்றன; வீதிகள், வியாபார நிலையங்கள் மூடிக் …

மேலும் .....

குடியுரிமை திருத்த சட்டத்தால் மோசமான விளைவுகள் உண்டாகும்: பாஜகவுக்கு சிதம்பரம் எச்சரிக்கை

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் புதுகையில் திங்களன்று திமுக எம்எல்ஏ ரகுபதி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: குடியுரிமை மசோதா என்பது அரசியல் சாசனத்திற்கே முரணானது. மத்திய அரசு குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் …

மேலும் .....

தமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள் குரல் கொடுப்பார்களா…

கேரளம் வழிகாட்டுகிறது தமிழக முஸ்லிம் எம் எல் ஏக்கள் குரல் கொடுப்பார்களா… கொளச்சல் அஜீம்    கடந்த வாரம் கேரள சட்டப்பேரவையில் மந்திரி டாக்டர் கே.டி.ஜலீல் தாக்கல் செய்த ஒரு மசோதா ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆரோக்கியமான விவாதங்களுக்கு பிறகு ஒருமனதாக நிறைவேறியது..   “மதரஸா ஆசிரியர் சேமநலநிதி மசோதா” வை சபையில் தாக்கல் செய்த மந்திரி ஜலீல் பேசிய வார்த்தைகள் சபைக்குறிப்புகளில் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது..   …

மேலும் .....

குஜராத் கலவரத்தின் இரு முகங்கள் : இன்று நட்புக்கு இலக்கணமாக…! – இதுதான் இந்தியா

அகமாதாபாத்தில் புதிதாக திறக்கவுள்ள தனது காலனி கடையை திறந்து வைக்க கவுரவ அழைப்பாளராக அன்ஸாரியை அழைத்துள்ளார் மோச்சி. இதுசமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.   குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற இந்து – முஸ்லிம் கலவரத்தின் போது இரண்டு பேரின் புகைப்படம் ஒட்டுமொத்த இந்தியாவை நடுங்கச் செய்தது. அந்த புகைப்படத்தில் ஒருவர் கைகளை கூப்பி மிரட்சி நிறைந்த கண்களில், ரத்தக் காயத்துடன் இருப்பார். அவர் பெயர் குத்புதீன் …

மேலும் .....

ஆசிரியர்களே ஆதிப்பாடம் போதியுங்கள்

– வி.எஸ். முஹம்மத் அமீன் 1. கல்வியின் நோக்கம் போதியுங்கள் என்ன படிக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருவதுதான் பள்ளிக்கூடம். எப்படிப் படிக்க வேண்டும் என்பதைப் போதிப்பவர் ஆசிரியர். ஆனால் ஏன் கற்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான விடையை யாரும் எழுப்புவதில்லை. நோக்கங்களை நாம் கற்றுத்தருவதில்லை. ‘ஏன் படிக்கணும்?’உங்கள் மாணவர்களிடம் கேட்டுப்பாருங்களேன். ‘நல்ல படிக்கணும்.’,படிச்சு..? ‘நல்ல வேலையில சேரணும்’,சேர்ந்து…? ,‘நல்ல சம்பாதிக்கணும்’,வீடு வாங்கணும், கார் வாங்கணும். அமெரிக்காவில் போய் வேலை பார்க்க …

மேலும் .....

நீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.

வி.எஸ். முஹம்மத் அமீன் பட்டப்பகல்…! பரபரப்பான சாலை, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி..! கத்தியுடன் மாணவர்கள் துரத்திக் கொண்டு ஓடி வருகிறார்கள். சக மாணவனைத் துரத்தித் துரத்தி அடிக்கின்றார்கள். தொடரிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மக்கள் நிறைந்த இரயில் நடைமேடையில் அதேபோன்றதொரு பட்டப் பகலில் தொடரியின் வாசற்களில் தொங்கிக் கொண்டு பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசித் தீப்பொறியைப் பறக்கவிட்டு வெறிக்கூச்சலெழுப்புகிறார்கள். மூச்சுக்காற்று முண்டியடிக்கும் பேருந்துப் பயணத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் நிரம்பியிருக்கும்போது அந்தப் …

மேலும் .....