பதிவுகள்

சிப்பிக்குள் முத்துக்கள் – கார்டூன் குறும்படம்

 சிறுவர்களுக்கான இஸ்லாமிய நெறிமுறையில் எடுக்கப்பட்ட கார்டூன் குறும்படம் மற்றும் அனிமேஷன் படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்தது. ஐடியல் விஷன் வெளியீடு

மேலும் .....

ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன? – மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி

ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன? மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி   ஈகைத்திருநாள் என்னும் ஈதுல ஃபித்ரு அன்று ஏழை-எளியோருக்கு வழங்க வேண்டிய கொடை ஸதக்கத்துல்ஃபித்ரு அல்லது ஸகாதுல் ஃபித்ரு எனப்படுகின்றது. . ரமழான் மாத நோன்புகளை வைத்து முடித்தபிறகு கொடுக்கப்படுவதால் இது ஸதக்கத்துல் ஃபித்ரு எனப்படுகின்றது. . ரமழான் மாத நோன்புகளில் நாம் இழைத்துவிடும் சிறுசிறு குற்றங்களுக்கு பரிகாரமாக இது அமைகின்றது. ஏழை எளிய முஸ்லிம்களும் ஈதுப் …

மேலும் .....

நிறைபிறை – ஒரு முடிவுரையின் முன்னுரை

பிறை நிலாக் காலம் – நிறைபிறை வி.எஸ்.முஹம்மது அமீன்   ஒரு முடிவுரையின் முன்னுரை ————————————————————– இஸ்லாம் ஒரு மதமல்ல.. மார்க்கம்.! மார்க்கம் என்றால் வழிமுறை,வழிகாட்டும் நெறிமுறை.வழிகாட்டி நெறிப்படுத்தியவன் இறைவன்.அவன் ஒருவனே.அவன் ஏகன்.தனித்தவன்.அவன் எத்தேவையுமற்றவன்.அவனுக்கு இணை துணை எதுவுமில்லை. அவன் யாரையும் பெறவுமில்லை.யாரலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு மரணமென்பது இல்லை.அவன் நித்திய ஜீவன். அவனுக்கு ஒப்பாரும், அவனை மிக்காரும் எவருமிலர்.   ஆற்றல்மிக்க இறைவனே இந்த உலகைப் படைத்தான்.வானங்கள், பூமி,சூரியன், சந்திரன், …

மேலும் .....

பிறை 29 – பயிற்சிகள் பழக்கமாகட்டும்..!

பிறை நிலாக் காலம் — பிறை 29 வி.எஸ்.முஹம்மது அமீன்   பயிற்சிகள் பழக்கமாகட்டும்..!   ‘ஒரு மனிதன் புதுப்பழக்கத்தினை வழக்கமாக்கிக் கொள்வதற்கோ, வழக்கமாகிப்போன பழக்கத்தை விட்டொழிப்பதற்கோ அவனுக்குத் தொடர் பயிற்சி தேவைப்படுகின்றது.ஓரிரு நாள்களில் எப்பழக்கமும் கைவரப்பெறாது. 25 முதல் 30 நாள்கள் வரையிலான பயிற்சிகள் பழக்கமாகவே மாறிவிடும்’ என்பது உளவியலாளர்களின் ஒருமித்த கருத்து. பசியறிதல்,இச்சையடக்குதல்,பொய்,புறம் போன்ற தீயபழக்கங்களிலிருந்து விடுபடுதல், நின்று வணங்குதல், இறைத் தொடர்பு, திருமறையோடு தொடர்பு, வரையறாது …

மேலும் .....

பிறை 28 – ஈந்து கனியும் ஈகைப்பெருநாள்

பிறை நிலாக் காலம் — பிறை 28 வி.எஸ்.முஹம்மது அமீன்   பண்டிகை என்றாலே மகிழ்ச்சிதான்.ஆனால் இந்த மகிழ்ச்சி எல்லா மனங்களிலும் குடியிருக்குமா என்றால் சந்தேகம்தான். குடிசைக்குள் சோகம் கப்பியிருக்கும்.சாலையோரத்தில் சுருண்டுகிடப்பவனின் காய்ந்த வயிற்றுக்குச் சோறு கிடைக்குமா..? வாணவேடிக்கையால் வீதி ஜொலிக்கும்.வேட்டுகள் விண்ணதிரும்.ஊரெல்லாம் கும்மாளம்.கொண்டாட்டத்திற்கு மத்தியில் திண்டாட்டம் சம்மணமிட்டிருக்கும்.இந்தப் பண்டிகைகள் ஏழைகளுக்கு பயந்தராதவை.ஆனால் பெருநாள்கள் ஏனைய பண்டிகைகளிலிருந்து முழுமுற்றாக மாறுபடுகின்றன. பெருநாள் யாவரும் இன்புற்றிருக்கும் மகிழ்நாள்.   வயிறு பசித்திருக்கும்போது …

மேலும் .....

பிறை 27 – ஈரம் கனிந்த வீரம்

பிறை நிலாக் காலம் — பிறை 27 வி.எஸ்.முஹம்மது அமீன்   ஈரம் கனிந்த வீரம்   அதிகாலைத் துயிலெழுந்து, ஃபஜ்ர் என்னும் தொழுகை முடிந்து, குளித்து புத்தாடையணிந்து, உணவருந்திவிட்டு திடல் சென்று தொழுது, உரைகேட்டு, வீடுதிரும்புவதுடன் பெருநாளின் கடமை முடிந்துவிடுகிறது.இவை தவிர அந்த நாளில் வழக்கமான ஐவேளைத் தொழுகையைத் தொழவேண்டும்.இறைவன் மிகப்பெரியவன் என்பதே பெருநாளின் தாரக மந்திரம் எனவே அந்த நாளில் இறைவனின் பேரருளை நினைந்து அவனை அதிகமதிகம் …

மேலும் .....

பிறை 26 – படிப்பினை தரும் பண்டிகை

பிறை நிலாக் காலம் — பிறை 26 வி.எஸ்.முஹம்மது அமீன்   படிப்பினை தரும் பண்டிகை   இஸ்லாமியர்களுக்கு இரண்டே பண்டிகைகள்தான். ஒன்று நோன்புப் பெருநாள்.மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள்.அப்படியென்றால் மீலாடி நபி,உரூஸ்,தர்கா விழா இதுவெல்லாம் இஸ்லாமியப் பண்டிகைகள் இல்லையா..?என நீங்கள் கேட்கலாம். தர்கா கந்தூரி,உரூஸ்,சந்தனக்கூடு யாவும் இஸ்லாத்தின் பேரில் அரங்கேறும் அநாச்சாரங்கள். இறைவனை நேரடியாகப் பிரார்த்திக்கலாம் என்று சொல்லும் இஸ்லாத்தில் இடைத்தரகர்களுக்கு வேலையே இல்லை.இறை மார்க்கத்தை எடுத்தியம்ப மார்க்க மேதைகள் …

மேலும் .....

பிறை 25 -இறைவன் அருளிய பெருநாள் இன்பம் நல்கும் திருநாள்

பிறை நிலாக் காலம் — பிறை 25 வி.எஸ்.முஹம்மது அமீன்   இறைவன் அருளிய பெருநாள் இன்பம் நல்கும் திருநாள்   நோன்புக்கான அறிவிப்பை ஏந்தி ரமளான் பிறை வந்தது. தினமும் மெல்ல வளர்ந்தது. நிறைந்தது. பின் தினமும் மெல்லத் தேயத் தொடங்கும்.தேய்ந்து மறையும்.பின் மீண்டும் ஷவ்வாலின் பிறை கருமேகத்தில் சின்னதாய் புன்முறுவலித்து எட்டிப்பார்க்கும்.பிறை தென்பட்டதும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்னும் புகழ்மொழி நன்றிப்பெருக்கோடு ‘அல்லாஹு அக்பர்’ என்று விண்தொட்டு நிற்கும். …

மேலும் .....

பிறை 24 – விழிபிதுங்கும் மனித நீதியும் வழிகாட்டும் இறை நீதியும்

பிறை நிலாக் காலம் — பிறை 24 வி.எஸ்.முஹம்மது அமீன்   விழிபிதுங்கும் மனித நீதியும் வழிகாட்டும் இறை நீதியும்   அது ஒரு வணிக நிறுவனம்.அதில் பணிபுரியும் ஊழியர்களில் ஒருவர் மிகவும் நேர்மையானவர். கடின உழைப்பாளி. நேரம் தவறாதவர்.வாடிக்கையாளர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர். மற்றொரு ஊழியரோ மோசடிப்பேர்வழி. சுத்த சோம்பேறி, வாடிக்கையாளர்களிடம் சண்டை வளர்ப்பவர். இருவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம்.ஒரே விதமான மரியாதை என்றால் நேர்மைக்கு என்ன …

மேலும் .....

பிறை 23 – பள்ளி என்னும் மையப்புள்ளி

பிறை நிலாக் காலம் — பிறை 23 வி.எஸ்.முஹம்மது அமீன்   பள்ளி என்னும் மையப்புள்ளி   நாள்தோறும் ஐவேளை ‘அல்லாஹு அக்பர்’ என்ற அழைப்போசை உங்கள் செவிகளை எட்டுகிறதல்லவா…! ஏகத்துவ நாதம் புறப்படுகின்ற அந்தப் பள்ளிவாசல்கள் எதற்காக? என்று கேட்டால் தொழுகை நடைபெறும் இடம் என எளிதாகச் சொல்லிவிடுவீர்கள்.ஆனால் ஐங்காலத் தொழுகைக்காக மட்டுமே பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளனவா என்றால் இல்லை.சமூகக் கட்டமைப்பின் பண்பாட்டுப் பாசறைகள்தாம் பள்ளிவாசல்கள்.   கல்வி கற்றுக்கொடுக்கப்படும் …

மேலும் .....