பதிவுகள்

பிறை 24 – விழிபிதுங்கும் மனித நீதியும் வழிகாட்டும் இறை நீதியும்

பிறை நிலாக் காலம் — பிறை 24 வி.எஸ்.முஹம்மது அமீன்   விழிபிதுங்கும் மனித நீதியும் வழிகாட்டும் இறை நீதியும்   அது ஒரு வணிக நிறுவனம்.அதில் பணிபுரியும் ஊழியர்களில் ஒருவர் மிகவும் நேர்மையானவர். கடின உழைப்பாளி. நேரம் தவறாதவர்.வாடிக்கையாளர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர். மற்றொரு ஊழியரோ மோசடிப்பேர்வழி. சுத்த சோம்பேறி, வாடிக்கையாளர்களிடம் சண்டை வளர்ப்பவர். இருவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம்.ஒரே விதமான மரியாதை என்றால் நேர்மைக்கு என்ன …

மேலும் .....

பிறை 23 – பள்ளி என்னும் மையப்புள்ளி

பிறை நிலாக் காலம் — பிறை 23 வி.எஸ்.முஹம்மது அமீன்   பள்ளி என்னும் மையப்புள்ளி   நாள்தோறும் ஐவேளை ‘அல்லாஹு அக்பர்’ என்ற அழைப்போசை உங்கள் செவிகளை எட்டுகிறதல்லவா…! ஏகத்துவ நாதம் புறப்படுகின்ற அந்தப் பள்ளிவாசல்கள் எதற்காக? என்று கேட்டால் தொழுகை நடைபெறும் இடம் என எளிதாகச் சொல்லிவிடுவீர்கள்.ஆனால் ஐங்காலத் தொழுகைக்காக மட்டுமே பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளனவா என்றால் இல்லை.சமூகக் கட்டமைப்பின் பண்பாட்டுப் பாசறைகள்தாம் பள்ளிவாசல்கள்.   கல்வி கற்றுக்கொடுக்கப்படும் …

மேலும் .....

பிறை 22 – சொல்ல இயலாச் சொல்லிது…!

பிறை நிலாக் காலம் — பிறை 22 வி.எஸ்.முஹம்மது அமீன்   சொல்ல இயலாச் சொல்லிது…!   ‘இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மை செய்தன தாம் விளையாட’ என்று வாழ்வைக் குறித்து விளையாட்டுத்தனமான கருத்தைச் சிலர் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இறைவன் இந்த உலகை வீணாக, விளையாட்டுக்காகப் படைக்கவில்லை.உயரிய நோக்கோடு மிக நுட்பமாகப் படைத்தான்.வழிகாட்டும் வான்மறையையும்,வழிநடத்தும் தூதர்களையும் அனுப்பினான்.அந்தப் பகலொளிப் படைவரிசையின் இறுதி முத்திரையாய் …

மேலும் .....

பிறை 21 – இறைவனை மகிழச் செய்யுங்கள்

பிறை நிலாக் காலம் — பிறை 21 வி.எஸ்.முஹம்மது அமீன்   இறைவனை மகிழச் செய்யுங்கள்   நீங்கள் ஒரு நீண்ட பயணம் மேற்கொள்கின்றீர்கள்.உங்களுடைய பணம்,சான்றிதழ்கள்,பாஸ்போர்ட், ஏடியெம் கார்டு,அலைப்பேசி யாவும் வைத்திருந்த கைப்பை தொலைந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எப்படியெல்லாம் தவித்துப்போவீர்கள்? தேடித்திரிகின்றீர்கள்.நாலாபுறமும் விசாரிக்கின்றீர்கள்.திடீரென தொலைந்துபோன உங்கள் கைப்பை உங்களுக்குக் கிடைக்கின்றது..! அப்போது நீங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை எதுவும் உண்டா…?   உங்கள் மகன் உங்களைப் புறக்கணித்துவிட்டுச் சென்றுவிடுகின்றான்.மீண்டும் …

மேலும் .....

பிறை 20 -ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த அற்புத இரவு

பிறை நிலாக் காலம் — பிறை 20 வி.எஸ்.முஹம்மது அமீன்   ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த அற்புத இரவு   அதிசயங்களை ஒன்றுதிரட்டி ஒரே நேரத்தில் பார்க்கவேண்டுமா? அதற்காக நீங்கள் எங்குமே செல்லவேண்டாம்.உங்களை நீங்களே பாருங்கள்…!மனிதனுக்குள் எத்தனை அதிசயங்கள் ஒளிந்துகிடக்கின்றன.மைக்ரோ வினாடியில் எதிரே இருக்கும் பிம்பத்தைப் படம்பிடித்து, வண்ணம் பிரித்து, தரம்பிரித்துக் காட்டுகின்ற உங்கள் கண்களைவிட அதிசயம் என்ன வேண்டியிருக்கிறது.ஐம்பது கிராம்கூடத் தேறாத நாக்கு நொடிக்கும் குறைவான நேரத்தில் சுவை …

மேலும் .....

பிறை 19 – புரட்சி செய்த புனிதநூல்

பிறை நிலாக் காலம் — பிறை 19 வி.எஸ்.முஹம்மது அமீன்   புரட்சி செய்த புனிதநூல்   அது ஒரு அறியாமைக்காலம்.மனித நேயம் மருந்துக்கும் இல்லாத காலம்.ஆடு மாடு ஒட்டகத்துடன் மனிதனும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த காலம். பெண் என்பவள் இவ்வுலகில் வாழ்வதற்கே அருகதையற்றவள் என்று கருதப்பட்ட காலமது! மண்ணுக்கும், கல்லுக்கும் இருக்கும் மரியாதைகூட மனிதனுக்கு இல்லாதிருந்த நேரமது! மது,சூது,மாது என மதி மயங்கிக் கிடந்த அந்த மக்களுக்கு மத்தியில் …

மேலும் .....

பிறை 18 – திக்கெட்டும் தித்திக்கும் திருமறை

பிறை நிலாக் காலம் — பிறை 18 வி.எஸ்.முஹம்மது அமீன்   திக்கெட்டும் தித்திக்கும் திருமறை   ‘உங்களால் ஆறாயிரத்துக்கும் அதிகமான வசனங்களைக்கொண்ட நூலை ஒரு புள்ளிகூட மாறாமல் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க இயலுமா?’என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? ‘அதெப்படி ஒரு எழுத்துகூட மாறாமல் அம்மாம் பெரிய நூலை மனப்பாடம் செய்வது’ என விழிப்புருவம் உயர உதடுபிதுக்குவீர்கள்தானே..!   ஆனால் உலகத்தில் ஒரே ஒரு நூல் மட்டும் …

மேலும் .....

பிறை 17 – திருக்குர்ஆன் ஓர் உலகப் பொதுமறை

திருக்குர்ஆன் ஓர் உலகப் பொதுமறை – பிறை 17 வி.எஸ்.முஹம்மது அமீன்   திருக்குர்ஆன் ஓர் உலகப் பொதுமறை   ‘திருக்குர்ஆன் முஸ்லிம்களின் வேதப்புத்தகம்.முஸ்லிம்களின் கடவுளான அல்லாஹ் முஸ்லிம் சமுதாயத்திற்கு சில மதபோதனைகளை வழங்கியிருப்பான். எல்லா மதத்திற்கும் ஒரு வேதம் இருக்கும் அதுபோலத்தான் குர்ஆனும்’ என்று யாரேனும் விளங்கிவைத்திருந்தால்…அது முற்றிலும் பிழையானது.   திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமேயான வேதநூல் அல்ல.அது உலக மக்கள் அனைவருக்கும் உரித்தான இறைவேதம்.அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மட்டுமே …

மேலும் .....

பிறை 16 – வேதம் வந்த மாதம்

வேதம் வந்த மாதம் – பிறை 16 வி.எஸ்.முஹம்மது அமீன்   இறைவன் மனிதனைப் படைத்தான்.படைத்ததோடு தன் பணி முடிந்துவிட்டது என அவன் ஒதுங்கிவிடவில்லை.மனிதனுக்கு வழிகாட்டும் வேதத்தை வழங்கினான்.அந்த வேத ஒளியில் வாழ்ந்து காட்டி மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும், வேத வழியில் மக்களைத் தூய்மைப்படுத்தவும் தூதர்களை அனுப்பினான்.   முதல் மனிதரான ஆதம்(அலை) அவர்கள் முதல் தூதர்.ஆதிகாலம் தொட்டே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை இறைவன் அனுப்பினான். இலட்சத்திற்கும் …

மேலும் .....

பிறை 15 – அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபை

பிறை நிலாக் காலம் — பிறை 15 வி.எஸ்.முஹம்மது அமீன்   அளவிலாக் கருணை இணையிலாக் கிருபை!   அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையுமுடைய இறைவன் தன் அடியார்களை ரமளான் மாதம் முழுவதும் பகலிலே பசித்திருக்கவும் இரவிலே நின்று வணங்கவும் சொல்கிறான்.இறைக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவனாக அடியான் நோன்பிருக்கின்றான்; நின்று வணங்குகின்றான்.அதற்காக உலகில் ஆரோக்கியமான உடல் நலமும், நல்ல குணநலன்களும் கிடைக்கின்றன. அமைதியான சமுதாயம் உருவாகின்றது.மனிதனுக்கு இந்த நன்மைகளே போதுமானது.கீழ்ப்படிந்தான் அதற்கான …

மேலும் .....