பதிவுகள்
Home / Tag Archives: கருணாநிதி

Tag Archives: கருணாநிதி

‘கலைஞர்’ கருணாநிதி: வாழ்க்கை குறிப்பு

1924 ஜூன் 3: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற சிற்றூரில் கருணாநிதி பிறந்தார். தந்தை பெயர் முத்துவேலர். தாயார் அஞ்சுகம். 1938: நீதிக்கட்சியின் தலைவர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார். 1941: தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார் கருணாநிதி. 1944 செப்டம்பர்: பத்மாவதி என்பவருடன் திருமணம் நடந்தது. மு.க. முத்து இவர்களின் மகன். 1948 செப்டம்பர்: முதல் மனைவி மறைந்த நிலையில், தயாளு அம்மாளுடன் இரண்டாவது …

மேலும் .....

‘ஜெயலலிதா புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்’- கருணாநிதி

ஜெயலலிதாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, ‘உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு சில நாளில் வீடு திரும்பவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் எல்லாம் சிகிச்சை அளித்தும், அரசியல் கட்சி தலைவர்கள், லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள், தாய்மார்கள் வாழ்த்தியதற்கு மாறாகவும், ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்று செய்திக் கேட்டு வருந்துகிறேன். கட்சி …

மேலும் .....

கோவை வன்முறைகள் கண்டிக்கத்தக்கவையாக உள்ளன- திமுக தலைவர் கருணாநிதி

ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து காவல் துறைக்கு ஈடாக பாராட்டப்பட்ட தமிழக காவல் துறையின் நிர்வாகம் சீர்கெட்டிருப்பதற்கு அதிமுக அரசுதான் காரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கோவையில் இந்து முன்னணியின் பொறுப்பாளர்களில் முக்கியமான இளைஞர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது வேதனையிலும் வேதனையான செய்தி. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். …

மேலும் .....